விஜய் 63 காக வேறு லெவலில் மாறி வரும் விஜய்.! காரணம் இவர் தான்.!

0
686
Vijay-63

விஜய்யின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார் அட்லீ, ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைகிறார் அட்லீ.விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகவுள்ள இந்த மற்றும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும், படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு போன்றவர்கள் நடிக்கவுள்ளனர்.

vijay-63

இந்த படத்தில் நடிகை விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கவிருக்கிறார் . இதற்காக சமீபத்தில் 16 பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இந்த மாதம் துவங்க உள்ளது என்று தகவல் வெளியான நிலையில் இந்த படத்திற்காக விஜய் கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்காக நடிகர் விஜய்க்கு தனியாக கண்ணன் என்பவர் விஜய்க்கு பயிற்சிகளையும் துவங்க உள்ளனராம். கண்ணன் நடிகர்கள் கார்த்திக், சூர்யாவிற்கு பயிற்சியாளராக இருந்துள்ளார் என்றும் குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய்க்கு ப்ரத்யேக டயட் மற்றும் உடற் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் பயிற்சியாளர் கண்ணன் பேசுகையில்,நடிகர் விஜய்க்கு பயிற்சியாளரை நான் ஆகியுள்ளது மிக பெரிய பாக்கியம்.அவர் இப்போதே ஒரு அளவான நல்ல உடல் அமைப்பில் தான் உள்ளார். ஆனால், அவரை இன்னும் கொஞ்சோம் பெரிதாக, கட்டுமஸ்தான உடலில் இதுவரை யாரும் பார்த்தது இல்லை. இந்த படத்தில் ஒரு உண்மையான விளையாட்டு வீரர் எப்படி இருப்பாரோ அப்படியே இருப்பார் என்று கூறியுள்ளார். இதனால் இந்த படத்தில் நடிகர் விஜய்யை வேறு பரிமாணத்தில் பார்க்கலாம்.