விஜய் 63 : ஸ்பார்ட்ஸ் மேன் கட்டிங்கில் விஜய்.! வைரலாகுது விஜய்யின் புதிய கெட்டப்.!

0
2584
Vijay63
- Advertisement -

சர்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் போன்ற படங்களை தொடர்ந்து அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக மீண்டும் இணைகிறது அட்லீ மற்றும் விஜய்யின் வெற்றிக் கூட்டணி.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, கதிர், விவேக் ஆனந்த் ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரபட்டாளங்களும் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்க : அர்னால்டு மகளை திருமணம் செய்த அவென்ஜர்ஸ் பட நாயகன்.! யார் தெரியுமா.! 

- Advertisement -

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது இந்த படம். மேலும், இந்த படத்தின் நடிகர் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியளராக நடிக்கிறார். சமீபத்தில் நடிகர் விஜய்யின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் விளையாட்டு வீரரை போன்று ஷார்ட் கட்டிங்கில் இருக்கிறார் விஜய். எனவே, இந்த கெட்டப்பும் விஜய்க்கு இந்த படத்தில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதே போல இந்த படத்தில் விஜயின் பெயர் மைக்கேல் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு தகவல் வைரலாக பரவி வந்தது.

-விளம்பரம்-

ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி இந்த படத்தில் நடிகர் விஜய், பிகில் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பெயரும் தர லோக்கலாக இருப்பதால் இந்த பெயரும் ரசிகர்களுக்கு பிடித்துபோய்விட்டது. மேலும், வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜயின் பிறந்தநாளன்று இந்த படத்தை பற்றிய மிகப்பெரிய அப்டேட் வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிரிபார்த்து வருகின்றனர்.

Advertisement