மாமியாருக்கு சோப் போட்ட சீன் தான் புடிச்ச சீன்.! விஜய் அளித்த பேட்டியை கலாய்க்கும் அஜித் ரசிகர்கள்.!

0
920

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது விஜய் மற்றும் அஜித் தான்.

விஜய் மற்றும் அஜித் இருவர் மத்தியில் துறை ரீதியாக போட்டிகள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இருவரும் சிறந்த நண்பர்கள் தான். ஆனால், தல தளபதி என்று பட்டப்பெயர்கள் வந்ததோ அப்போது இருந்தே இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் சண்டை வெடித்துக்கொண்டு தான் வருகிறது.

இதையும் பாருங்க : மீராவை பற்றி தர்சனுக்கும் தெரியும்.! இவர்கள் இருவருக்கும் உள்ள தொடர்பை கேட்டா ஷாக்காவீங்க.!

- Advertisement -

இரு ரசிகர்களும் மாறி மாறி விஜய் மற்றும் அஜித்தை கலாய்த்து பல மீம் மற்றும் ட்ரோல்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் அளித்த பேட்டியின் வீடியோ ஒன்றை அஜித் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் தொழுகுப்பாளினி, விஜயிடம் ‘நீங்கள் அனுபவிச்சு பண்ண படம் எது’ என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளித்த விஜய், ரசிகன் படத்தில் பொண்ணு நெனச்சி மாமியாருக்கு சோப்பு போட்டு விடுவேன். அந்த காட்சியை நான் ரசித்து பண்ணேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement