கோட் படக்குழு உடன் நடிகர் விஜய் சண்டை போட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களில் பெரும் தோல்வியை தழுவியது.
இருப்பினும் வசூல் ரீதியாக அந்த படங்கள் வெற்றி கண்டது. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
தளபதி 68 படம்:
இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. மேலும், விஜய்யின் லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தை திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
படம் குறித்த தகவல்:
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். அதோடு இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
பர்ஸ்ட் லுக் போஸ்டர்:
புத்தாண்டை முன்னிட்டு தளபதி 68 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் தளபதி 68 திரைப்படத்திற்கு கோட் G.O.A.T Greatest of all time என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படம் ஒரு விண்வெளி கதையாக இருக்கும் என்றும், விஜய் விஞ்ஞானியாக இருப்பார் என்றெல்லாம் ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கி விட்டார்கள். தற்போது படத்தின் சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. அதோடு டைம் டிராவல் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Thalapathy @actorvijay – cute fight for our team is Wholesome 🤣😍❤️
— Vivek (@Lyricist_Vivek) January 9, 2024
‘Sixxxu.. Sixu Sixu’ @iamRashmika @iYogiBabu @ActorShaam @directorvamshi pic.twitter.com/1SzjyP7LMK
விஜய் லேட்டஸ்ட் வீடியோ:
இந்நிலையில் விஜய் கோட் படக்குழு உடன் இருக்கும் வீடியோ ஒன்று தான் வெளியாகியிருக்கிறது. அதில் விஜய் பட குழுவுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அப்போது ஒரு பந்து சிக்ஸ் சென்று விட்டது. உடனே விஜய் தன்னுடைய அணிக்காக மற்றவர்களுடன் சிக்ஸு சிக்ஸு சண்டை போட்டு கொண்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.