‘எச் ராஜா யார்னு தெரியாதே’ விஜய்யின் அரசியல் என்ட்ரி முதல் நயன் திருமணம் வரை – கணித்த கிளி ஜோசியர். வைரலாகும் வீடியோ.

0
481
kili
- Advertisement -

ஐம்பது வருடங்களாக தோளில் தையல் மிஷினை தூக்கி செல்லும் தையல்காரர், எம்பது வயதிலும் ஆப்பக்கடை நடத்திவரும் பாட்டி, தொலைந்து போன ,மறந்து போன சினிமா நடிகர்கள் என buhari junction என்கிற யூடியூப் சேனல் தொடர்ந்து எளிய மனிதர்களின் வாழ்வியல் முறையை பற்றி பேசிவருகிறது. அந்த சேனலின் சமீபத்திய கிளி ஜோசிய வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது..

-விளம்பரம்-

கிளி ஜோசியம் பார்க்கும் கடைசி தலைமுறையை சேர்ந்த ராஜூ என்பவருடன் தொகுப்பாளர் புஹாரி உரையாட தொடங்கிறார், ஐம்பத்தி எட்டு வயதான ராஜு நாற்பது வருடங்களாக கிளி ஜோசியம் பார்த்து வருகிறார்.தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் இன்னும் ஜோசியத்தை நம்பி அதையே தொழிலாக வாழ்ந்துகொண்டிருக்கும் ராஜு தான் கிளி ஜோசியத்தின் கடைசி தலைமுறை என குறிப்பிடுகிறார்.

இதையும் பாருங்க : இளம் நடிகையின் ஃபோட்டோவுக்கு இளம் இந்திய வீரர் போட்ட கமன்ட் – பதிலுக்கு நடிகை கேட்ட கேள்வியால் கலாய்க்கும் நெட்டிசன்கள்.

- Advertisement -

விஜய் ,நயந்தாராவுக்கு கிளி ஜோசியம்..

கிளி ஜோசியர்களின் வாழ்க்கை முறையை பற்றி பேசும் வீடியோவில் இடை இடையே தமிழகத்தின் பிரபலங்களுக்கும் கிளி ஜோசியம் பார்க்க ஆசைப்பட்டு , விஜய் ,நயந்தாரா சீமான் பிஜேபி தலைவர் அண்ணாமலை ,ஸ்டாலின் மற்றும் சசிகலா ஆகியோருக்கும் கிளி ஜோசியம் பார்ப்பதாக அந்த வீடியோ துவங்குகிறது

ஹெச்.ராஜா யாரென்று தெரியாது..

எல்லா பிரபங்களை பற்றி பேசும்போது, ஹெச்,ராஜாவுக்கு சீட்டு எடுத்து பார்க்க சொல்லி கேட்கிறார்,ஆனால் ஹெச்,ராஜா என்பவர் யாருன்னே தெரியாது என்கிறார் கிளி ஜோசியர் ராஜூ. பிஜேபி தலைவர்,டிவில எல்லாம் பேசுவார் என சொல்லியும் கடைசி வரை தெரியாது என்று சொல்லிவிட்டார்..

-விளம்பரம்-

விஜய் அரசியலுக்கு வருவாரா?

பீஸ்ட் படம் வெளியாக இருக்கிறது.விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு, சிவன் பார்வதியுடன் இருக்கும் சீட்டினை கிளி எடுத்து போட, விஜய் தற்போது அரசியலுக்கு வரமாட்டார்,ஆனால் தமிழ் சினிமாவில் தவிற்க முடியாத சக்தி விஜய் தான் என கிளி சீட்டெடுத்திருப்பதாக சொல்கிறார்.

சசிகலா அரசியல் வரவு?

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு, பாம்பு சீட்டு எடுத்து போட்டிருப்பதால் அவர் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்றது கிளி

நயந்தாரா கல்யாணம்.

நயந்தாராவுக்கு சீட்டெடுத்த கிளி,ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சீட்டு எடுத்துக்கொடுக்க, நிறைய சோதனைகளை கடந்த இந்த நபருக்கு அவர் மனது வைத்தால் எப்போது வேண்டுமானாலும் திருமணம் நடக்கலாம், திருமண தோஷம் எதுவும் இல்லை என்று சொல்கிறார்.

அண்ணாமலை :

இதுபோல தமிழக் பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு அண்ணாமலையார் படமும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நாகூராண்டவரும். ஐயப்பனும் என இரண்டு சீட்டுகள் எடுத்துக்கொடுத்திருக்கிறது கிளி, தமிழகத்தின் முன்னனி பிரபங்களுக்கு பார்த்த இந்த கிளி ஜோசியம் வீடியோ வைரலாகி வருகிறது

Advertisement