இளம் நடிகையின் ஃபோட்டோவுக்கு இளம் இந்திய வீரர் போட்ட கமன்ட் – பதிலுக்கு நடிகை கேட்ட கேள்வியால் கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
669
venkatesh
- Advertisement -

பிரபல நடிகையின் போட்டோவுக்கு வெங்கடேஷ் போட்ட கமெண்ட்டுக்கு அந்த நடிகை பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக கிரிக்கெட் இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் கிரிக்கெட்டை விரும்பிப் பார்த்து வருகிறார்கள். இதனால் வருடம் வருடம் கிரிக்கெட்டிற்கு என்று பல போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் அனைத்து தரப்பு மக்களின் பேவரட்டாக இருப்பது ஐபிஎல் தொடர் தான்.

-விளம்பரம்-

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க போகிறது என்றால் போதும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் ஆகிவிடுவார்கள். அந்த வகையில் தற்போது 15வது ஐபிஎல் தொடர் ஆரம்பித்துள்ளது. ஆரம்பித்ததிலிருந்தே ஐபிஎல் கிரிக்கெட் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த முறை ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் ஆடி வருகிறார்கள். இதனால் அவர்கள் தங்களின் திறமையை பயங்கரமாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

ஐபிஎல் தொடர்:

இதன் மூலம் இவர்களுக்கு இந்திய அணியில் சேர வாய்ப்பு கிடைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏன்னா, இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையும் நடைபெற உள்ளதால் இந்த ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த முறை பலர் இந்திய அணியில் தேர்வாகவும் வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து தனது முழு திறனையும் ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

வெங்கடேஷ் ஐயர்:

அந்த வகையில் ஐபிஎல் தொடரில் இளம் வீரராக விளையாடிக் கொண்டிருப்பவர் வெங்கடேஷ் ஐயர். இவர் ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே சிறப்பாக விளையாடி வருகிறார். ஏற்கனவே இந்திய அணிக்காக களம் இறங்கியவர் தான் வெங்கடேச ஐயர். தற்போது கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் களமிறங்கிய இவர் ஆல்-ரவுண்டராக விளையாடி வருகிறார். தன்னுடைய அசாத்தியமான ஆட்டத்தால் இவர் விளையாடி வருகிறார்.

-விளம்பரம்-

பிரியங்கா ஜவல்கர் பற்றிய தகவல்:

அது மட்டும் இல்லாமல் இவர் உலக உலக கோப்பை தொடரிலும் விளையாடலாம் என கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தெரிவித்திருந்தார்கள். அந்த அளவிற்கு வெங்கடேஷ் வெறியாக விளையாடி இருந்தார். இந்த நிலையில் வெங்கடேஷ் பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது என்னவென்றால், பிரபல நடிகை ஒருவரின் இன்ஸ்டாகிராமில் வெங்கடேசன் cute என்று பதிவு செய்துள்ளார். அவர் வேற யாரும் இல்லைங்க, நடிகை பிரியங்கா ஜவல்கர். விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான டாக்சிவாலா, திம்மரசு,கமணம் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பிரியங்கா ஜவல்கர். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் அதிக ஆக்டிவாக இருப்பார்.

பிரியங்கா ஜவல்கர் பதிவிட்ட பதிவு:

அதுமட்டுமில்லாமல் பிரியங்கா பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பிரியங்கா ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த புகைபடங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டது. இதை பார்த்த இளம் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரியங்காவின் புகைப்படத்திற்கு cute என்று பதிவு செய்துள்ளார். இதனை கவனித்த பிரியங்கள் யாரு? நீங்களா? என ரிப்ளை செய்துள்ளார். இது தொடர்பான செய்திகள் தான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து பலவித கருத்துக்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement