என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..!ரசிகர்களுக்காக நோ சொன்ன விஜய் ..!

0
403
Vijay

நடிகர் விஜய் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதே போல ஒரு சில படங்கள் விஜய் நடிக்க தவறவிட்டு பின்னர் வேறு சில ஹீரோக்கள் நடித்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. ஆனால், சமீபத்தில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாக உள்ள படத்திலும் நடிகர் விஜய் தான் நடிப்பதாக இருந்துள்ளது.

suseenthiran

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சமீத்தில் வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படத்தில் புதுமுக நடிகர் ரோஷன் என்பவர் நடித்துள்ளார். இந்த படத்தில் ரோஷனின் நடிப்பை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் இந்த படத்தின் கதையை விஜய்யிடம் ஏற்கனவே கூறியதாக இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் விளக்கமளித்துள்ள இயக்குனர் சுசீந்திரன், இந்த படத்தின் கதையை நான் முதலில் விஜயிடம் சொன்ன போது அவருக்கு இந்த கதை மிகவும் பிடித்துப்போய் விட்டது. ஆனால், இந்த படத்தின் ஹீரோ மனநிலை சரியில்லாத கதாபாத்திரத்தில் இருப்பதை தனது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்போதைக்கு ஆக்சன் மற்றும் கமர்சியல் கதையில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துவிட்டார் என்று சுசீந்திரன் கூறியுள்ளார்.

நல்ல கதை என்று தெரிந்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து விஜய் இந்த படத்திற்கு நோ சொல்லி இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு நடிகர் விஜய் எந்த அளவிற்கு முக்கியதுவம் கொடுக்கிறார் என்பது விஜய் ரசிகர்கள் பெருமைப்பட வேண்டிய விடயம் தான்.