கோலமாவுல கஞ்சா, டாக்டர்ல பெண் கடத்தல் – பீஸ்ட்லையும் இப்படி ஒரு கடத்தல் கதை தானாம். கசிந்த செம தகவல்.

0
533
beast
- Advertisement -

தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்த புதிய தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

பீஸ்ட் படம் ஒரு தங்கக் கடத்தல் தொடர்பான கதை. தங்க கடத்தல் செய்யும் தீவிரவாதிகள் மால் ஒன்றில் புகுந்து கொண்டு அங்குள்ள பொதுமக்களை மையமாக வைத்து தப்பிக்க நினைக்கிறார்கள். பொது மக்களை காப்பாற்றவும் தீவிரவாதிகளை பிடிக்கவும் விஜய் அதிரடி ஆக்ஷனில் இறங்குகிறார். இது தான் பீஸ்ட் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. விஜய்யின் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும், தளபதி விஜய் படம் பற்றி தகவல்கள் ஏதாவது ஒன்று சோசியல் மீடியாவில் வந்தாலே போதும் அதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி விடுவார்கள்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது பீஸ்ட் படம் குறித்து இதுவரை வெளிவராத தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் செல்வராகவன் உட்பட மூன்று வில்லன்கள் நடித்துள்ளார்கள். இதில் செல்வராகவன் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டது. கலை இயக்குனர் கிரண் அவர்களின் கைவண்ணத்தில் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் போடப்பட்டு அதில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது. அதுமட்டும் இல்லாமல் டெல்லி ஷாப்பிங் மால்லில் கூட காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது மீண்டும் கோகுலம் ஸ்டுடியோவில் மால் செட் அமைக்கப்பட்டு அங்கு பத்து நாட்கள் பீஸ்ட் படத்திற்கான படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும், பின்னர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக படக்குழு ஜார்ஜியா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே அனிருத் இந்த படத்தின் பாடல்களுக்கு எல்லாம் கம்போஸ் செய்து முடித்து விட்டதாக தகவல் கசிந்துள்ளது. அதோடு இந்த படத்தில் விஜய்– பூஜாவிற்கு இரண்டு டூயட் பாடல்கள் இருப்பதாகவும், அதில் ஒரு டூயட் பாடலை சிவகார்த்திகேயன் எழுதி தனுஷ் பாடி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement