விஜய்யின் சர்கார் படம் ரஜினியின் இந்த பட காப்பியா.! குழப்பத்தில் ரசிகர்கள்!

0
926
Rajini-and-vijay

விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் பிர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானத்திலிருந்து படத்தை பற்றிய கூடுதலான சில தகவல்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் கதை ரஜினி படத்தில் இருந்து சுடபட்டது என்று ஒரு சில தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது.

sarkar

இளையதளபதி விஜய் , இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இவர்கள் இருவரின் கூட்டணியில் 3 வது முறையாக இடைந்துள்ள படத்திற்கு ‘சர்கார் ‘ என்று பெயரிடபட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு வெளியான இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.

ஏற்கனவே ‘சர்கார்’ படத்தில் முதல் போஸ்டர் ஹாலிவுடில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘ரன் ஆள் நைட் ‘ என்ற படத்தின் போஸ்ட்டரை போலவே இருக்கின்றது என்று சமூக வலைத்தளங்களில் ஒரு விவாதம் போய் கொண்டிருக்கிறது.அதுமட்டுமல்லாமல் ‘சர்கார்’ என்ற தலைப்பில் பாலிவுட் நடிகர் அமிதா பச்சன் கடந்த 2005 ஆம் ஆண்டே நடித்துள்ளார் என்ற ஒரு விடயமும் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தன.

rajini

sivaji

இந்நிலையில் இந்த படத்தின் கதை, சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘சிவாஜி ‘ படத்தை போன்றே கதை தான் என்று தகவல்கள் வலம் வருகின்றது. அந்த படத்தை போன்றே விஜய் வெளிநாட்டில் வசதியான நபராக இருந்து வருகிறார். பின்னர் சம்பாதித்த பணத்தை வைத்து இந்தியாவிற்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய என்னும் போது ஒரு சில அரசியல்வாதிகளால் பிரச்சனை ஏற்பட்டு மொத்த பணத்தை இழக்கிறாராம். அதன் பின்னர் அரசியல்வாதிகளை எதிர்த்து இழந்த பணத்தை மீட்டு மக்களுக்கு எப்படி நல்லது செய்கிறார் என்பது தான் கதை என்று சில தகவல்கள் பரவி வருகிறது.