நான் வியர்வை சிந்தி உழைப்பது இவர்களுக்காகத்தான் – மனம் திறந்து பேசிய விஜய் !

0
1823
Actor Vijay
- Advertisement -

அட்லீ இயக்கத்தில், விஜய் நடித்துள்ள மெர்சல் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்-ன் 100-வது படமான இதில் விஜய்க்கு ஜோதியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர்.
Mersal
பல தடைகளை தாண்டி வரும் 18ம் தேதி அன்று திரைக்கு வரவுள்ள இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். அவர்களை பொறுத்தவரை இது மெர்சல் தீபாவளியே.

இதையும் படிங்க: அடேங்கப்பா மெர்சல் படம் இத்தனை திரையரங்கில் வெளியாகிறதா!

- Advertisement -

இந்த நிலையில் ரோஹினி திரையரங்கின் நிர்வாக இயக்குனர் ரேவந்த் சரண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது, விஜய்யை சந்தித்தது என்ன ஒரு ஸ்பெஷலான தினம்!.ரசிகர்கள் தான் என்னுடைய பலம்.அவர்களின்ம கிழ்ச்சிக்காகவும், அன்பிற்காகவும் தான் நான் வியர்வை சிந்தி உழைக்கிறேன் என்று விஜய் கூறியதாக அவர் பதிவு செய்துள்ளார்.