பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்களுடன் ஸ்டாலின் இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி.

0
296
- Advertisement -

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தன் வாழ்வில் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள் குறித்து நடிகர் விஜய் சேதுபதி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பல போராட்டங்களுக்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக கடந்த 2021ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி மு க மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் முதல் முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் மு.க. ஸ்டாலின். இவரின் செயல்பாடுகள் குறித்து பல்வேரு பிரபலங்களால் பாரட்டப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

மேலும், தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் எங்கள் முதல்வர், எங்கள் பெருமை சார்பில் பெயரில் முதலமைச்சரின் வாழ்க்கை குறித்த புகைப்பட கண்காட்சியை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடத்தி இருக்கிறார்கள். இந்த கண்காட்சி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அவரை தொடர்ந்து இந்த கண்காட்சிக்கு அரசியல் தலைவர்களும், பல பிரபலங்களும் நேரில் பார்வையிட்டு இருந்தனர்.

- Advertisement -

கண்காட்சியை பார்வையிட்ட பிரபலங்கள்:

மேலும், முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிறந்தநாள் குறித்து எல்லோரும் தங்களின் வாழ்த்துக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்கள். இந்த கண்காட்சியின் நிறைவு விழா சில தினங்களுக்கு முன் தான் நடந்தது. இந்த கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பார்வையிட்டு இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூரி யோகி பாபு, வடிவேலு உட்பட பல பிரபலங்களும் பார்வையிட்டிருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதியும் இந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு இருக்கிறார்.

விஜய்சேதுபதி அளித்த பேட்டி:

இவருக்கு அமைச்சர் மூர்த்தி கண்காட்சியை சுற்றி காண்பித்திருக்கிறார். பின் விஜய் சேதுபதி பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய 70 ஆண்டு கால பொது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை, அரசியல் வரலாறு ஆகியவற்ற இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் மிகச் சிறப்பாக முதலமைச்சரின் பொது வாழ்க்கை பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

முதல்வர் ஸ்டாலின் குறித்து சொன்னது:

எனக்கு முதலமைச்சர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. இந்த கண்காட்சியை நானும் நேரடியாக வந்து பார்வையிட்டதில் அதிக சந்தோஷம்மாக இருக்கிறது. அதில் முதலமைச்சர் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது நடந்த துயரங்கள் எல்லாம் தத்ரூபமாக காட்சியாக இருக்கிறது. பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்களுடன் மு க ஸ்டாலின் புகைப்படங்களை பார்க்கும்போது வியந்து விட்டேன். மு க ஸ்டாலின் கருணாநிதியின் வாரிசு என்பதால் மட்டும் இந்த உயர்ந்த பொறுப்புக்கு வரவில்லை.

அரசியல் குறித்து சொன்னது:

அவர் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட துன்பங்கள், சவால்கள் எல்லாமே அதிகம். இதை இந்த கண்காட்சியின் மூலம் அனைவரும் தெரிந்து கொள்வார்கள். இன்றைய இளைஞர்கள் பாட புத்தகத்தோடு அரசியல் குறித்து தெரிந்து கொள்வதும் நல்லது. தமிழ்நாட்டின் உடைய வரலாறு நம்மை ஆட்சி செய்த தலைவர்களின் வரலாறு ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

Advertisement