சிவா கூட பழகுனது இல்ல, சிவா மாறி எனக்கு பிசினஸ் இல்ல.! விஜய் சேதுபதி.!

0
1034
Vijay-sethupathi
- Advertisement -

ஒரு நடிகரா நீங்க பெரிய இடத்துல இருக்கீங்க. அதை எப்படிப் பார்க்குறீங்க..? நாம இது பெரிய இடம்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். அது, உண்மையில்லை. ஒரு மலையைப் பார்க்கும்போது, அது பெருசா தெரியும். அதுமேல ஏறி நின்னதுக்குப் பிறகு, பக்கத்துல இருக்கிற மலை அதைவிடப் பெருசா தெரியும். அதனால, பெரிய இடம்னு எதுவுமே கிடையாது. நான் பெருசா நினைக்கிறது மக்கள் என்மீது வெச்சிருக்கிற அன்பை மட்டும்தான். ஒரே சமயத்துல இத்தனை பேரோட அன்பை இனி நம்மளால பெற முடியுமாங்கிறது சந்தேகம்தான்.

-விளம்பரம்-

sethupathy

- Advertisement -

‘எம்ஜிஆர் – சிவாஜி’, ‘ரஜினி – கமல்’, ‘விஜய் – அஜித்’னு எப்போவுமே சினிமாவுல ஒரு காம்போ இருக்கும். அதுமாதிரி ‘சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி’ கம்போவை எப்படிப் பார்க்குறீங்க?

“நான் சிவாவோட நெருங்கிப் பழகுனது இல்லை. அவரும் நானும் வெளிய எங்கேயாவது சந்தித்தா, நல்லா பேசிக்குவோம். அன்பைப் பறிமாறிக்குவோம். அவருக்கு சினிமா பெரிய பிசினஸ். என்னைவிட வேகமா முன்னேறிக்கிட்டு இருக்கிற ஒரு மனிதர். எல்லா முன்னணி நடிகர்களையும் இதுவரை கம்போவா பார்த்துக்கிட்டு இருந்த மக்களுக்கு இப்போவும் ஒரு காம்போ தேவைப்படுது. தன்னால உருவானதுதான் இந்த கம்போ, நாங்க உருவாக்கியது கிடையாது.

-விளம்பரம்-

உங்களுக்கு பெண் ரசிகைகள் அதிகமா இருக்காங்க. என்ன காரணம்னு நினைக்கிறீங்க?

“முன்னாடியெல்லாம் உங்க சொந்த ஊர் எதுனு கேட்டா ‘ராஜபாளையம்’னு சொல்வேன். இப்போல்லாம் ‘தமிழ்நாடு’னு சொல்றேன். யாரையும் பாரபட்சம் பார்க்காம நேசிக்கணும்னு நினைக்கிறேன். பெண்கள் அன்பானவர்கள். பெண் என்பவள் தன்னை அழகுபடுத்துறதோட நின்றுவிடாமல், தன் குடும்பத்தையும் சேர்த்து அழகுபடுத்துபவர்கள். நான் வெளிய போகும்போது எந்தச் சட்டை போட்டுட்டு போகணும்னு முதற்கொண்டு என் வீட்ல சொல்றாங்க. அந்தளவுக்கு அக்கறை மிக்கவர்கள் பெண்கள். அதனால, அந்த மாதிரி அன்பு பரப்புற வேலைகளை கொஞ்சமா பார்த்தாலே போதும். பெண்களுக்கு நம்மளை ரொம்ப பிடிச்சுப் போயிடும். அதைத்தான் நான் ‘சேதுபதி’, ‘கருப்பன்’ மாதிரியான படங்கள்ல பண்ணேன். அதனாலதான் பெண்களுக்கு என்னை ரொம்பப் பிடிக்குதுனு நினைக்கிறேன்”.

Advertisement