தமிழ் சினிமாவில் அணைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய் சேதுபதி தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்றே சொல்லலாம். நடிப்பையும் தாண்டி பொது நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொள்ளும் போது பேசும் பேச்சுக்கள் ரசிக்கும்படியாக இருக்கும்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி கூகை திரைப்பட இயக்கம் நடத்திய 96 திரைப்படத்தின் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு பல்வேறு பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் வந்திருந்தனர். மேலும் இந்த கூட்டத்தில் பல்வேறு நபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்தார் விஜய் சேதுபதி.
அப்போது கூட்டத்தில் இருந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் சின்ன பெண் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச முயன்றனர். பின்னர் அந்த சிறுமியிடம் பேசிய விஜய் சேதுபதி அந்த பெண்ணிற்கு என்ன அட்வைஸ் செய்தார் என்பதை நீங்களே பாருங்கள்.