‘விஜய் சேதுபதியை உதைத்ததால் காந்திக்கு 1000ரூபாய் கொடுத்தேன்’ பகிரங்கமாக கூறிய அர்ஜுன் சம்பத் – போனில் வெளுத்து வாங்கியுள்ள நபர்.

0
344
arjunsampath
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய்சேதுபதி. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது வழங்கப்பட்டு இருந்தது. இது குறித்து பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இதனிடையே சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி சென்றிருக்கிறார். அப்போது அங்கு இருந்த நபர் ஒருவர் விஜய் சேதுபதியை பின்புறமாக எட்டி உதைத்து இருந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை எழுப்பி இருந்தது.

-விளம்பரம்-

இது தொடர்பாக உதைத்த மகா காந்தியும், விஜய் சேதுபதியும் தங்களுடைய தரப்பில் இருந்து விளக்கம் அளித்து இருந்தார்கள். அதற்கான வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து பலரும் சோசியல் மீடியாவில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் விஜய் சேதுபதி தாக்கியதை குறித்து டுவிட் போட்டு இருந்தார். அதில் அவர் ‘விஜய் சேதுபதியை அடிப்பவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும்’ என்று கிண்டலும் கேலியுமாக பதிவிட்டிருந்தார்.

இதையும் பாருங்க :போடா பண்ணி மூஞ்சி வாயா’ – தன்னை திட்டியவருக்கு அபிஷேக் கொடுத்த பதில். மன்னிப்பு கேட்ட நபர்.

- Advertisement -

மேலும், இந்த பதிவை பார்த்த பொதுமக்கள் கொந்தளித்து தாறுமாறாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து மதுரையில் இருந்து ஒருவர் அர்ஜுன் சம்பத்திற்கு கால் செய்து கடுமையாக கண்டித்து இருக்கிறார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசி இருப்பது, அர்ஜுன் சம்பத் அவர்களே, சாமி பேரை சொல்லி தேவையில்லாத வேலை எல்லாம் செய்யாதீங்க. விஜய் சேதுபதி அவர்கள் அவருடைய வேலையை செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் சென்று தேவை இல்லாமல் மதத்தைப் பற்றி பேசுவதா? இதற்கு நீங்கள் கேள்வி கேட்ட மகா காந்தியை தான் விமர்சிக்க வேண்டும் மற்றும் தண்டிக்க வேண்டும்.

நீங்கள் விஜய் சேதுபதியை என்ன வேண்டுமானாலும் பேசுவீங்களா? அதை கேட்டு நாங்கள் சும்மா இருப்போம் என்று நினைத்தீர்களா?இதற்கு முன்னாடி கூட சூர்யாவை உங்கள் கட்சிக்காரர்கள் அவமரியாதையாக பேசி இருந்தார்கள். இப்போ விஜய் சேதுபதி, இப்படி எல்லாம் நீங்கள் பேசினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். ஓடவிட்டு கையை ஒடச்சி அடிப்போம். பார்க்கிறீர்களா? கடவுள், சாதி பெயரில் ஏன் இவ்வளவு கோவலமாக நடந்து கொள்கிறீர்கள். விஜய் சேதுபதி, சூர்யா போன்ற ஆட்கள் எல்லாம் சமூகத்திற்கு அவர்களால் முடிந்ததை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உங்கள மாதிரி ஆட்கள் சாதி பெயரில் நாட்டில் பல பிரச்சனைகளை கொண்டு வருகிறீர்கள். இந்த மாதிரியெல்லாம் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்துங்கள் என்று அர்ஜுன் சம்பத்தை தாறுமாறாக வெளுத்தி வாங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement