மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் முதலில் இந்த மாஸ் நடிகர் தான் நடிக்க இருந்தது.! பாத்தா ஷாக் ஆவிங்க.! யார் தெரியுமா.?

0
627
Merku-Thodarchi-Malai

ஒரு தரமான கதையை சிறப்பான முறையில் தயாரித்து கொடுத்தால் மக்கள் மத்தியில் அது நல்ல வரவேற்பை பெரும் என்ற ஒரு கூற்றுக்கு உதாரணம் தான் சமீபத்தில் வெளியாகியுள்ள “மேற்கு தொடர்ச்சி மலை ” என்ற திரைப்படம் புதுமுக இயக்குனர் லெனின் பாரதி இயக்கியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தயாரித்துள்ள இந்த படத்தில் காதநாயகனாக புதுமுக நடிகர் ஆண்டனி ராஜ் நடித்துள்ளார்.

merku-thodarchi-malai

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி “நான் இந்த படத்தை இயக்குனர் லெனின் பாரதிக்காக தான் தயாரித்தேன். அவர் என்னிடம் இந்த படத்தின் கதை பற்றி கூறிய போது எனக்கு சம்பளம் 25 லட்சம் தான். எனவே, பணம் சேர்ந்ததும் இந்த படத்தை தயாரித்தேன். இந்த படம் எடுத்து முடித்து அதனை பார்த்த போது எனக்கு திருப்தியாக இல்லை. நான் போட்ட பணத்தை எடுத்தால் போதும் என்று நினைத்து இந்த படத்தை விற்றுவிடாலம் என்று நினைத்தேன்.

பின்னர் தான் இந்த படத்தை சரவணன் வெளியிட முன்வந்தார். தற்போது இந்த படத்திற்கு நீங்கள் தந்துள்ள விமர்சனம் எனக்கு பெருமியாக உள்ளது. என்னுடைய படத்திற்கு விமர்சனம் வந்தபோதெல்லாம் நான் கோபபட்டுள்ளேன். ஆனால், இப்போது விமர்சனம் பற்றி புரிதல் ஏற்பட்டுள்ளது. நீங்கள் பாராட்டியது நான் நான் நினைத்தது தவறு என்று உணர வைத்துள்ளது என்னை செருப்பால் அடித்தது போல இருக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள ஆண்டனி என்னை விட மிகப்பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும்”என்று தெரிவித்துள்ளார்.

merku-thodarchi-malai 5

“மேற்கு தொடர்ச்சிமலை” படத்தில் முதன் முதலில் நடிகர் விஜய் சேதுபதி தான் நடிப்பதாக இருந்தார். ஆனால், இந்த படத்தின் இயக்குனர் வேறு ஏதாவது நடிகர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறவே இந்த படத்தில் கதாநாயகனாக ஆண்டனி நடித்தார். இந்த படம் 2 ஆண்டுகளுக்கு முன்னேறே எடுக்கப்பட்டு விட்டது. ஆனால், இந்த படத்தை சர்வதேச விருது வழங்கும் விழாவில் அனுப்பலாம் என்று படக்குழு திட்டமிட்டது.

vijay-sethupathi

ஆனால் , இந்திய அளவிலேயே சில பல அரசியல் காரணங்களால் விருது விழாவிற்கு இந்த படம் நிராகரிக்கபட்டது.அதனால் நம்பிக்கை இழந்த இந்த படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதி எங்கே இந்த படம் ஒரு தோல்விப்படமாக அமைந்து விடுமோ என்று எண்ணியதற்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த படம் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவிற்கு அனுப்பபட்டு பல்வேறு விருதுகளை வாங்கியது.