பெங்களூர் விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை எகிற உதைத்த நபர் – வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.

0
1089
vijaysethupathi
- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதியை பாதுகாவலர்கள் முன்பாகவே எட்டி உதைத்த நபரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய்சேதுபதி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு இந்தி என்று பல மொழிகளில் நடித்து வரும் விஜய் சேதுபதி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட தொகுப்பாளராகவும் பங்கேற்று வருகிறார் தற்போது இவர் மாஸ்டர் செக்-அப் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் இவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது கூட வழங்கப்பட்டு இருந்தது.தற்போது பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் விஜய் சேதுபதி. இந்த வகையில் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி சென்றிருக்கிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் சேதுபதி விமான நிலையத்திற்கு சென்றபோது அங்கே அவரை சிலர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜய் சேதுபதியும் அவர்களிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது பின்னர் அங்கேயே இருந்த பாதுகாப்பு காவலர்கள் வெளியே சேதுபதியை அங்கிருந்து அழைத்துச் சென்றனர் அப்போது பின்னாலிருந்து வேகமாக ஓடி வந்த நபர் ஒருவர் விஜய் சேதுபதியை எகிரி காலால் உதைத்து இருக்கிறார்.

இதனை சற்றும் எதிர்பாராத விஜய்சேதுபதி மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார். பின்னர் விஜய்சேதுபதியை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். சமீபத்தில் கூட இவர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றினை நடிக்க இருந்தார். ஆனால் அந்த படத்திற்கு பல்வேறு எதிர்ப்பு கிளம்பியதால் அந்த படத்தில் இருந்து விலகினார் விஜய் சேதுபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement