தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக கலக்கி கொண்டு இருப்பவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.
தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 15 ) ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவை சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார்கள். இந்த விழாவில் ரசிகர்களுக்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த விழாவில் இப்படத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டார்கள். பின் ஒருவர் பின் ஒருவர் மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்கள்.
இதையும் பாருங்க : மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய இந்த அரசியல் வசனங்கள் எடிட் செய்யபட்டு விட்டதா ?
இந்த விழாவில் பேசிய விஜய் சேதுபதி, மனிதனைக் காப்பாற்ற மனிதன்தான் வருவான், மேலே இருந்து யாரும் வரமாட்டார்கள். கரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். இது மாதிரியான தருணத்தில் உறவினர்களே நம்மைத் தொடுவதற்கு யோசிக்கும்போது நம்மைத் தொட்டு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடவுளைக் காப்பாற்றுகிறேன் என்று கூறுபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான மகத்தான மனிதரை கடவுள் இன்னும் படைக்கவில்லை. கடவுளுக்கும் மனிதனுக்கும் நடுவே எந்த மதமும் கிடையாது. தன்னுடைய மதத்தில் கூறியிருப்பதைப் பகிராமல் அனைவரிடமும் மனிதத்தையும், சகோதரத்துவத்தையும் பகிருங்கள்.
இந்த உலகம் மனிதர் வாழ்வதற்கானது. எனவே, அன்பைப் பகிர்ந்து சகோதரத்துவத்துடன் இருப்போம்” என்றார். மேலும், விஜய் சேதுபதியிடம், உங்களின் ரோல் மாடல் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி, என்னுடைய அப்பா தான் என்று கூறி, பின்னர் என்னுடைய பெயர் விஜய் சேதுபதி கிடையாது. என்னுடைய பெயர் விஜயகுருநாத சேதுபதி காளை முத்து என்றார். பின்னர் மறைந்த தனது தந்தை குறித்து பேசிய விஜய் சேதுபதி.
சம்பாதித்த பணம் அறிவு அனைத்தும் மகனுக்கு போய் சேர வேண்டும் என்று நினைப்பது அப்பா தான். அவர்கள் சொன்ன அறிவுரைகள் நம் வாழ்க்கைக்கு எப்போதாவது உதவும். நான் ஒரு முறை சரக்கடிச்சிட்டு நான் அப்பா போட்டோ முன்னாடி நின்னு திட்டி இருக்கேன். இப்போ நான் நல்ல இருக்கேன், ஏன்யா இப்போ நீ என்கூட இல்லனு சொல்லி இருக்கேன்