பிரம்மாண்ட செட், சிம்ரன், பிரியா ஆனந்த் என்று 50கும் மேற்பட்ட கலைஞர்கள் – ‘அந்தகன்’ படத்தின் வேற லெவல் அப்டேட்.

0
792
prasanth
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டு இருந்தவர் பிரசாந்த். இவர் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர். இவர் பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் வணிக ரீதியாக வெற்றியை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

மேலும், 90 காலகட்டத்தில் விஜய், அஜித்தை விட ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட மவுஸ் கொண்டு இருந்தவர். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றிப்படம் என்று பார்த்தால் அது வின்னர் தான். அதற்குப் பிறகு இவருடைய நடிப்பில் வந்த பல படங்கள் தோல்வி அடைந்து இருக்கிறது. பின் இவருடைய மார்க்கெட்டும் சினிமாவில் குறைய தொடங்கியது. இதனால் பிரசாந்த் இடம் தெரியாமல் மறைந்து போனார். இடையில் அப்பப்போ தெலுங்கு சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்து இருந்தார்.

- Advertisement -

பிரசாந்த் திரைப்பயணம்:

அதோடு நடிகர் பிரசாந்த் திருமணம் ஆகி விவாகரத்து பெற்று இருந்தார். இவருடைய திருமண வாழ்கை தோல்வி அடைந்ததால் நடிகர் பிரஷாத் மன உளைச்சலுக்கு ஆளாகி சில வருடங்கள் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். பின் இவர் ‘சாகசம்’ படம் மூலம் மீண்டும் சினிமா உலகில் ரீ எண்ட்ரி கொடுத்து இருந்தார். ஆனால், அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தற்போது இவர் அந்தகன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

பிரசாந்த் நடிக்கும் படம்:

இந்த படத்தை தனி ஒருவன் படத்தை இயக்கிய மோகன் ராஜா தான் இயக்கி இருக்கிறார். இவர் வேற யாரும் இல்லைங்க, நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் ஆவார். மோகன் ராஜா பிற மொழி படங்களை தமிழில் ரீமேக் செய்வதில் கைதேர்ந்தவர். அப்படி அவர் தமிழில் ரீமேக் செய்து இயக்கிய பல படங்கள் வெற்றி பெற்று இருக்கிறது. தற்போது இவர் அந்தகன் என்ற படத்தை ரீமேக் செய்கிறார். தற்போது அந்த படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

அந்தகன் படம் குறித்த தகவல்;

இந்த திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்து இயக்கி வருகிறார் நடிகரும், இயக்குனருமான தியாகராஜன். இந்த படத்தில் ஏராளமான முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படம் முழுவதும் முடிந்த நிலையில் இறுதிகட்ட காட்சிக்காக “டோர்ரா புஜ்ஜி” என்ற பாடலை ராக்ஸ்டார் அனிருத் மற்றும் மக்கள் செல்வன் விஜயசேதுபதி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு நடனம் அமைத்தது நடனபுயல் பிரபுதேவா இசைந்துள்ளார்.

வைரலாகும் புகைப்படம்:

பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் காட்சி படமான உடனே அந்தகன் படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அந்தகன் படத்தை கலைப்புலி S தாணு அவர்கள் உலகமெங்கும் திரையிட திட்டமிட்டு வருகிறார். தற்போது இந்த பாடல் காட்சியின் போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisement