தன்னை பற்றி பாடி ஷேமிங், ஆடைகள் குறித்த விமர்சனத்திற்கு விஜய் சேதுபதி கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் தொடங்கி பாலிவூட் வரை கலக்கி கொண்டு இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர்.
மேலும், இவர் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படங்கள் மட்டும் ஹிட் அடித்து விடுகிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி இருந்தார். அதற்கு முன் இவர் ஒரு தெலுங்கு படத்தில் கூட வில்லனாக நடித்து இருந்தார். பின் கடந்த ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடித்த “விக்ரம்” படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வில்லனாக நடித்திருந்தார். பின் சமீபத்தில் வெளியாகியிருந்த ஜவான் படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருந்தார். இதனை அடுத்து இவர் தமிழ், ஹிந்தி என பல மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
மெர்ரி கிறிஸ்மஸ் படம்:
அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மெர்ரி கிறிஸ்மஸ். இந்தப் படத்தில் கத்ரீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்காக அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி, ரசிகர்களுடைய அன்பு எப்போதுமே உண்மை என்று நம்புகிறேன்.
விஜய் சேதுபதி பேட்டி:
அவர்களுடைய அன்பை பெறுவது எனக்கு எனர்ஜி ட்ரிங்க் போன்றது. மக்கள் உங்களை நேசிக்கும் போது உங்களுடைய பணியை அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று அர்த்தம். என்னுடைய ரசிகர்கள் மன்றத்திலிருந்து இதைதான் நான் புரிந்து கொண்டேன். அது எப்போதும் எனக்கு ஆறுதலை அளிக்கிறது. மும்பைக்கு நான் முதலில் வந்தபோது சில பேருக்கு தான் என்னை தெரியும். ஆனால், இப்போது நிறைய பேருக்கு என்னை தெரிகிறது. அவர்கள் பேசவும் வருகிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.
ஆடை குறித்த விமர்சனம்:
இதன் மூலம் நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதை உணர்த்துகிறது. அதே சமயம் பாலிவுட் விழாக்களுக்கு நான் எளிமையான உடைகள், செருப்புகளை அணிந்து செல்லும்போது நிறைய கிண்டல் கேலிகளை எல்லாம் எதிர் கொண்டிருக்கிறேன். இதனால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டும் இருக்கிறேன். சில நேரங்களில் நான் ஆடைகள் அணிவதில் அதிக கவனமாக இருப்பேன். எனக்கு சௌகரியம் உள்ள ஆடைகளை அணிகிறேன். ஆனால், மக்கள் நான் வசதியாக இருக்கிறேன் என்பதை காட்டுகிறேன் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.
பாடி ஷேமிங் குறித்து சொன்னது:
சில சமயம் நான் எளிமையாக இருக்கிறேன் என்று கூறுகிறார்கள். செருப்பு அணிந்து சென்றால் கூட எளிமையாக இருக்கிறேன் என்று அர்த்தமா? நிகழ்ச்சிக்கு செல்லும்போது அங்கு பலர் நன்றாக ஆடைகளை அணிந்து வருவார்கள். அப்போது நானும் மிகவும் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. அதனால் சில நிகழ்ச்சிகளுக்கு செல்வதையே தவிர்க்க முயற்சிக்கிறேன். இதற்கு முன் நிறைய பாடி ஷேமிங் எல்லாம் எதிர் கொண்டேன். ஆனால், தற்போது நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னை ஏற்றுக் கொள்கிறார்கள். அது எனக்கு ஒரு வரம். நான் நானாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மக்களுக்கு நன்றி என்று கூறி இருக்கிறார்.