டைடிலை வச்சிட்டு அப்புறம் படம் எடுத்தா இப்படி தான் – Vjsயின் மாமனிதன் எப்படி ? முழு விமர்சனம் இதோ.

0
1155
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்காக இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசை அமைத்திருக்கின்றனர். நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இந்த படம் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், மாமனிதன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

தேனி மாவட்டம் பண்ணையபுரத்தில் ஆட்டோ ஓட்டி பிழைப்பை நடத்தி வருபவர் ராதாகிருஷ்ணன். அதே ஊரை சேர்ந்த அம்பிகாவை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. மகிழ்ச்சியாக தன்னுடைய மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார் ராதாகிருஷ்ணன். பின் அரசு பள்ளியில் படிக்கும் தன் குழந்தைகளை எப்படியாவது தனியார் பள்ளியில் சேர்த்து நன்கு படிக்க வைத்துவிட வேண்டும் என்ற கனவுடன் ராதாகிருஷ்ணன் போராடுகிறார். அப்போது ரியல் எஸ்டேட் மூலமாக அதிக பணம் ஈட்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

- Advertisement -

அந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடும் ராதாகிருஷ்ணன், மாதவன் என்பவரால் ஏமாற்றப்படுகிறார். ஊர்க்காரர்களின் பணத்தையெல்லாம் சுருட்டிக்கொண்டு மாதவன் தலைமறைவாக செல்கிறார். இதனால் ஊராரின் கோபம் முழுவதும் ராதா கிருஷ்ணனை நோக்கி திரும்புகிறது. இந்த பிரச்சினைகளை அவர் எப்படி சமாளிக்கிறார்? அந்த ஊர் மக்களிடம் எப்படி தப்பித்தார்? குழந்தைகளை படிக்க வைத்தாரா? இல்லையா? இறுதியில் என்ன ஆனது? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் ராதாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், அம்பிகா கதாபாத்திரத்தில் காயத்ரியும் நடித்திருக்கிறார்கள்.

நடிகர்கள் குறித்த தகவல்:

ஒரு சராசரி குடும்ப தலைவன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். வழக்கம் போல் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்து இருக்கிறார். நடிகை காயத்ரி நடுத்தரக் குடும்பங்களில் இருந்து வழக்கமான மனைவியாகவும், குழந்தைகளை எண்ணி வருந்தும் ஒரு தாயாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். இருவருமே தங்களுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இஸ்லாமியராக வரும் குரு சோமசுந்தரத்தின் நடிப்பு படத்திற்கு பக்கபலம். ஷாஜி சென் குறைந்த காட்சிகளில் வந்தாலும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தின் முதல்-இரண்டாம் பாதி:

தர்மதுரை படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர்- விஜய் சேதுபதியும் இந்த படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள். ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி பேசும் இந்த படம் சிறுகதை போல தான் திரையில் தெரிகிறது. படத்தின் முதல் பாதி விஜய்சேதுபதி எனும் மனிதனையும் அவன் வாழ்ந்து வரும் வாழ்க்கை குறித்து காண்பித்திருக்கிறார்கள். அதில் சுவாரஸ்யமான காட்சிகள் எதுவுமே இல்லை. இதனால் சில இடங்களில் சோர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டாம் பாதியில் காட்சி கொஞ்சம் விறுவிறுப்பாக நகர்கிறது. விஜய் சேதுபதி நல்லவராக மாமனிதனாக காட்டும் முயற்சியில் இயக்குனரின் மெனக்கடல்.

படம் பற்றிய தகவல்:

ஆனால், அது கதைக்கு ஒட்டாமல் ஓடிவிடுகிறது. படத்தில் பல லாஜிக் குறைபாடுகள் இருக்கிறது. படம் முழுக்க ஆணை சார்ந்து தான் பெண் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவத்தை காண்பித்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் படத்தில் விஜய் சேதுபதியின் மகன் என்ஜினியரிங் படித்து முன்னேறுகிறான். ஆனால், பெண் என்ன படிக்கிறார்? என்பது குறித்து எந்த விபரமும் இல்லை. இந்த படத்தில் பெண் கதாபாத்திரங்கள் எழுதியிருக்கும் விதம் பலவீனம் என்று சொல்லலாம்.

பிளஸ்:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பக்கபலமாக இருக்கிறது.

மனிதனை மாமனிதனாக காட்டுவதில் இயக்குனர் அரும்பாடுபட்டு இருப்பது தெரிகிறது.

மைனஸ்:

பல இடங்களில் லாஜிக் குறைபாடுகள்.

பெண்களுக்கான முக்கியத்துவம் இல்லை.

முதல்பாதி சலிப்பை தட்டி இருக்கிறது.

கதைக்களத்தில் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் மாமனிதன்– கைகொடுக்கவில்லை.

Advertisement