‘இல்ல அதுக்கு காரணம் தம்மு’ – ஒரு மனுஷன் இவ்ளோ ஓப்பனாவா பேசறது – வைரல் வீடியோ இதோ.

0
38554
vjs
- Advertisement -

தனக்கு இருக்கும் சிகெரெட் பழக்கம் குறித்து ‘லாபம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி ஓப்பனாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் திரைப்பட இயக்குனர் ஜனநாதன் காலமான சம்பவம் திரைத்துறை பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. தமிழில் இவர், இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்று பல்வேறு படங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இயற்கை திரைப்படத்திற்கு பின்னர் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சமூக பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்தது.தனது முதல் படமான இயற்கை படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றார் ஜனநாதன். இறுதியாக ஜெயம்ரவி நடித்த ‘பூலோகம்’ திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றிய ஜனநாதன் விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை இயக்கி வந்தார்.

இதையும் பாருங்க : நீதிபதியிடமே போலீஸ் பற்றி புகார் கூறி கோர்ட்டில் கதறி அழுத மீரா. ஜாமின் வழங்கிய நீதிபதி.

- Advertisement -

ஜனநாதன் காலமானதால், அவர் இறுதியாக இயக்கி வந்த லாபம் படம் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இந்த படத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்து கொடுத்துவிட்டார் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இந்த படம் வருகிற 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Laabam Movie | Laabam Tamil Movie - filmciti.com

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் பேசிய விஜய் சேதுபதி ஒருகட்டத்தில் தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தார் இதனால் அருகில் இருந்தவர் அவருக்கு தண்ணீர் கொடுத்தார் ஆனால் விஜய் சேதுபதி வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இல்ல அதுக்கு காரணம் தம்மு என்று ஓப்பனாக கூறினார்.

-விளம்பரம்-
Advertisement