அமீர் படத்தில் இதனால் தான் நடிக்க முடியாமல் போனது – விஜய் சேதுபதி விளக்கம்.

0
1375
vjs

அமீர் கானின் ‘லால் சிங்’ படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய நாளிலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். தற்போது இவர் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் துணை கதாபத்திரத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

ஹீரோவாக மட்டுமல்லாமல் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வருகிறார். அதிலும் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த பின்னர் விஜய் சேதுபதியின் மார்கெட் வேற லெவலில் சென்று விட்டது. அதிலும் பாலிவுட்டில் இருந்து பல்வேறு வாய்புகள் வரிசையில் நின்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த அமீர் கான் படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

இதையும் பாருங்க : சனம் ஷெட்டியின் புதிய காதலர் ‘மோனி’ வேறு யாரும் இல்லை – பிக் பாஸிலேய காதலை சொல்லியுள்ள சனம். இதோ வீடியோ.

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி கடந்த ஆண்டு அமீர் கானின் ‘லால் சிங்’ என்ற படத்தில் கமிட் ஆகி இருந்தார். கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கப்படாமலே இருந்தது. ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற Forrest Gump படத்தின் ரீ- மேக்கில் அமீர் கான் நாயகனாக நடிக்க இருந்தார்.மேலும், இந்த படத்தில் benjamin buford நடித்த Bubba என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. Benjamin Buford படத்தில் bubba கதாபாத்திரம் மிகவும் முக்கிய கத்தபதிராமக இருந்தது.

லால் சிங் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு தமிழனாக நடிப்பதாக இருந்தார்.ஆனால் , இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தமான போது இருந்த உடல் எடையை விட தற்போது விஜய் சேதுபதியின் உடல் எடை கூடி இருப்பதால் இந்த படத்தில் இருந்து அவரை அமீர் கான் நீக்கியதாக தகவல்கள் வெளியானது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள விஜய் சேதுபதி, கொரோனா லாக்டவுன் காரணமாக அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. லாக்டவுனுக்கு பின் ஐந்து தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அமீர் கான் படத்திற்கான தேதிகள் ஒதுக்க முடியாமல் போனது. இருப்பினும் விரைவில் அவருடன் பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement