புளியோதரை சாப்பிட்டதை பார்த்து கிடைத்த பட்டம் தான் ‘மக்கள் செல்வன்’ – விஜய் சேதுபதி சொன்ன சுவாரஸ்ய தகவல்.

0
1363
vijaysethupathi
- Advertisement -

மக்கள் செல்வனாக தமிழ் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி. இவர் தன்னுடைய கடின உழைப்பால் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதிலும் ஒடிடி தளத்தில் முழுவதிலும் இவருடைய படங்கள் தான் அதிகம் வெளியாவதால் இவரை ஒடிடி நாயகன் என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவரிடம் உங்களுக்கு மக்கள் செல்வன் என்ற பெயர் எப்படி வந்தது என்று கேட்கப்பட்டதற்கு விஜய் சேதுபதி அவர்கள் கூறியது, எனக்கு இந்த பெயர் 2014ல் வந்தது. அப்போது நான் தர்மதுரை படம் பண்ணிட்டு இருக்கும் போது தான் இந்த பெயர் எனக்கு வந்தது. நாங்கள் தர்மதுரை படத்தின் ஷூட்டிங்காக தேனில் தங்கி இருந்தோம். ஆண்டிபட்டி கனவா இடத்தில் சூட் இருந்தது. நான் முன்னாடி போயிட்டு இருந்தேன். அங்க மூணாறு தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இருந்தாங்க. அப்ப அவங்க ஒரு இடத்தில உட்கார்ந்து புளியோதரையும், வடை துவையல் இதெல்லாம் சாப்பிட்டுட்டு இருந்தாங்க. உண்மையாவே அந்த சாப்பாடு அற்புதமாக இருந்தது.

- Advertisement -

பின் நான் அந்த சாப்பாட்டை என்னுடைய இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கும் ஊட்டி விட்டேன். நாங்கள் அவர்களுக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை. நாங்கள் சாப்பாடு கேட்ட உடனே முகம் சுளிக்காமல், இல்லை என்று சொல்லாமல் அன்போடு தந்தார்கள். பின் நான் இப்படி இருப்பதை பார்த்துட்டு என் இயக்குனர் எனக்கு ‘மக்கள் செல்வன் என்று பெயர் வைத்து ஆசீர்வாதம் பண்ணி எனக்கு 500 ரூபாய் கையில் காசு கொடுத்தார். அப்படித்தான் அந்த பெயர் உருவானது. நான் கூட பட்ட பெயர் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால், அவர் பட்ட பெயர் வைத்ததற்கு இரண்டு காரணம் இருக்கு என்று சொன்னார். ஒன்று நமக்கு நாமே புகழ்ந்து எழுதி வைக்கப்படுவது. இரண்டு இந்த பெயர் உன்னைக் காப்பாற்றும் என்று சொன்னார்.

எப்படி என்றால் மக்கள் செல்வன் என்று சொல்லும் போது நம்ம செய்யும் நூறு தவறுகளில் 10, 20 தவறாது நம்மை செய்யவிடாமல் குறைக்கும். நான் பரிசுத்த ஆத்மாவாக மாறுவேன் என்று சொல்லவில்லை. முடிந்தவரை அந்த பெயர் என்னை தவறு செய்ய விடாமல் தடுக்கும் மற்றும் என்னை பாதுகாக்கும் என்று சொன்னார். பிறகு அந்த பெயரை வைத்து என்னை அன்பாக அழைக்கிறது ரொம்ப சந்தோசமாக இருக்கு என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement