யாஷிகாவை தொடர்ந்து விபத்தில் சிக்கினாரா பாலாஜி ? அதுவும் அவர் வாங்கிய புதிய Bmw காரில் ?

0
1665
balaji
- Advertisement -

சமீப காலமாகவே விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கார்களை வாங்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். குக்கு வித் கோமாளி புகழ், சரத் ஆகியோர் புதியகாரை வாங்கி இருந்தனர். அதே போல கலக்க போவது யாரு ஈரோடு மகேஷ், டிவி ஜாக்லின் என்று பலர் சமீபத்தில் புதிய காரை வாங்கி இருந்தனர். அந்த வகையில் விஜய் டிவி பிரபலமான தாடி பாலாஜியும் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கிஇருந்தார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. இவர் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வந்தாலும் இவருக்கும் பெரும் பிரபலத்தையும் வசதியையும் ஏற்படுத்து கொடுத்தது விஜய் டிவி தான் என்பது பலரும் அறிந்த ஒன்று. பல ஆண்டுகள் சினிமா மற்றும் தொலைக்காட்சியில் இருந்து வந்தாலும், பாலாஜியின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்தார்.

இதையும் பாருங்க : இணையத்தில் ஒரு ரவுண்டு வந்த ‘மணிகே மாகே ஹிதே’ பாடல் உருவானது இப்படித்தானாம்.

- Advertisement -

அதையெல்லாம் தாண்டி தற்போது ஒரு நல்ல நிலையில் இருக்கு பாலாஜி சமீபத்தில் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி இருந்தார். அந்த புகைப்படத்தை தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட பலரும் பாலாஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் பாலாஜி தான் வாங்கிய புதிய பிஎம்டபிள்யூ கார் விபத்தில் சிக்கியதாக செய்திகள் வைரலாக பரவியது.

மேலும் இது குறித்த பல்வேறு புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இப்படி ஒரு நிலையில் இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள பாலாஜி தான் கார் விபத்தில் சிக்கியதாக பரவும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘யாருப்பா நீங்க எல்லாம் கிரியேட்டர் கொஞ்சம் சரி பார்த்து போடுங்கப்பா என்றும் தான் விபத்தில் சிக்கியதாக பரவும் செய்தி பொய் என்றும் கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement