பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணது இல்ல, முடிய Curl பண்ணது இல்ல ஆனாலும் – சிம்ரனை புகழ்ந்த PBS. சிம்ரனின் Reaction

0
2216
Simran
- Advertisement -

நடிகை சிம்ரன் குறித்து பிரியா பவானி சங்கர் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது.

-விளம்பரம்-

அதன் பின் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் என்ற படத்தின் மூலம் தான் ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின் இவர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து மிக பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த “மான்ஸ்டர்” படத்தில் நடித்து இருந்தார் . இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்தது.

- Advertisement -

பிரியா பவானி சங்கர் திரைப்பயணம்:

அதன் பின் ஹரிஷ் கல்யான், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் அறிமுக இயக்குனர் கார்த்திக் சங்கர் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘ஓ மணப்பெண்ணே’. இதனை அடுத்து சமீபத்தில் அருண் விஜய்- ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் யானை. இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த பத்து தல படத்தில் ப்ரியா நடித்து இருக்கிறார்.

பிரியா பவானி சங்கர் நடிக்கும் படங்கள்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது ராகவா லாரன்ஸ், ப்ரியா பவானி சங்கர் நடித்த ருத்ரன் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனை அடுத்து இவர் அகிலன், மற்றும் இந்தியன் 2 போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் நடிகை சிம்ரன் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் அளித்திருக்கும் பேட்டி வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

பிரியா பவானி சங்கர் அளித்த பேட்டி:

அதாவது சமீபத்தில் பேட்டி ஒன்றில் பிரியா பவானி சங்கர் கூறியிருந்தது, இந்த நடிகை இடம் இது இல்லை என்று சொல்லவே முடியாது. அவங்க சிம்ரன் மேம். அவங்க பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்யாமல், முடி ஸ்டைட்னிங் செய்யாமல் இருந்தவர். நடிப்பு, நடனம் என அனைத்திலும் சிறந்தவராக இருப்பவர். அவர் நடித்த படங்கள் எல்லாமே அருமையாக இருக்கும். சிம்ரன் மேடம் கதாநாயகி மட்டுமில்லாமல் வில்லி கதாபாத்திரத்திலும் மிரட்டி இருக்கிறார்.

யாரை சொல்கிறார் PBS :

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சூப்பராக நடிக்க கூட நடிகை என்று பாராட்டி பேசி இருந்தார். பிரியா பவானி ஷங்கர் பேசிய இந்த வீடியோவை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூட பகிர்ந்து இருக்கிறார். ஆனால், பிரியா பவானி சங்கர் அந்த பேட்டியில் பிளாஸ்டிக் சர்ஜரி என்று குறிப்பிட்டு இருப்பது யாரை சொல்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் சினிமாவில் சுருதி ஹாசன், சமந்தா, நயன்தாரா என்று பலர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார்கள் என்ற விமர்சனம் அடிக்கடி எழும் நிலையில் பிரியா பவானி சங்கரின் இந்த பதில் கொஞ்சம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது

Advertisement