வில்லன் ரோல்கள் மூலம் டாப் நடிகர் அளவுக்கு சம்பாதித்துள்ள Vjs, அடேங்கப்பா மூன்றே படத்தில் இத்தனை கோடியா.

0
491
vjs
- Advertisement -

ஒரே மாதத்தில் மூன்று படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி கமிட்டாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடா முயற்சியினாலும், கடும் உழைப்பினாலும் தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருந்த விக்ரம் படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

விக்ரம் படம்:

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி இண்டர்நேஷனல் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி இருந்தார்கள்.

மாமனிதன் படம்:

இதனை அடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார். இந்த படத்தில் காயத்ரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்காக இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இளையராஜாவும், அமைத்திருக்கின்றனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

வில்லனாக மிரட்டும் விஜய் சேதுபதி:

இந்நிலையில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க கமிட்டாகி நடிக்கும் படங்களில் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே விஜய் சேதுபதி அவர்கள் ஹீரோவை விட வில்லன் கதாபாத்திரத்திற்கு மிரட்டி வருகிறார். இவர் விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். இவர் அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஸ்பா 2 படத்திலும் வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க 25 கோடி சம்பளம் வாங்குகிறார்.

வில்லனாக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்:

இதனை அடுத்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படம் ஜவான். இந்த படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக விஜய் சேதுபதிக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாக உள்ள படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கிறாராம். இந்த படத்திற்காக விஜய் சேதுபதிக்கு 25 கோடி சம்பளம் கொடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக மொத்தம் இந்த 3 படங்களையும் கடந்த மாதமே விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதன் மூலம் ஒரே மாதத்தில் விஜய் சேதுபதிக்கு 80 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.

Advertisement