அடுத்த படத்தில் இசையமைப்பாளராகும் விஜய்சேதுபதி..!

0
470
vijay-sethupathi
- Advertisement -

தமிழ் சினிமாவில் சாதாரணமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகராக தற்போது உயர்ந்துள்ளார் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாக காத்திருக்கின்றன அதில் முக்கியமாக செக்க சிவந்த வானம், 96 மற்றும் சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

-விளம்பரம்-

vijay sethupathi

- Advertisement -

தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி அவ்வப்போது புதுமுக இயக்குனர்களுக்கும் வாய்ப்பு அளிக்க தவறுவதில்லை. தற்போது அவர் புறம்போக்கு படத்தில் உதவி இயக்குனராக இருந்த வேங்கட கிருஷ்ண ரகுநாத் என்பருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளார் மேலும் இது அவருடைய முதல் படமாகும்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி இசையமைப்பாளர் கேரக்டரில் நடிக்க உள்ளார் என்றும் அவருக்கு இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் உண்டு அதில் ஒருவர் வெளிநாட்டுக்காரர் என்றும் இயக்குனர் ரகுநாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வமான செய்திகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த படத்திற்காக விஜய் சேதுபதி சில இசை கருவிகளை பயன்படுத்த பயிற்சி எடுத்து வருகிறார்.

-விளம்பரம்-

தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் மற்றும் கதாநாயகிகளுடன் நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது புதுமுக இயக்குனருக்கு வாய்ப்பளித்திருப்பது அவருடைய குணத்தினை வெளிக்காட்டும் வண்ணம் உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement