இனி நான் விஜய் சேதுபதி உடன் இணைய போவதில்லை – மேடையிலேயே அறிவித்த இயக்குனர் சீனு ராமசாமி.

0
647
- Advertisement -

இனி விஜய் சேதுபதியுடன் நான் இணைய போவது இல்லை என்று இயக்குனர் சீனு ராமசாமி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் சீனு ராமசாமி. இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கூடல் நகர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படம் 3 தேசிய விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் இடி முழக்கம் என்ற படத்தை இயக்கி முடித்து இருக்கிறார். இந்த படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் சார்பாக கலைமகன் முபாரக் தயாரித்து இருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதோடு ஆக்சன் திரில்லர் வகையில் இந்த படம் உருவாகியிருக்கிறது.

- Advertisement -

பாராட்டு விழா நிகழ்ச்சி:

இந்நிலையில் இனி விஜய் சேதுபதியுடன் நான் இணைய போவது இல்லை என்று இயக்குனர் சீனு ராமசாமி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, வரும் ஏப்ரல் 20-ம் தேதி ரஷ்யாவில் நடைபெற இருக்கும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் சீனு ராமசாமி- விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான மாமனிதன் திரைப்படம் திரையிடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் மையத்தில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

சீனு ராமசாமி அளித்த பேட்டி:

இந்த நிகழ்ச்சியில் மாமனிதன் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி, அமைச்சர் சாமிநாதன் நடிகர் ராஜேஷ், பூச்சி முருகன், இந்தோ ரஷ்ய மையத்தின் அதிகாரிகள் என பலர் பங்கேற்று இருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் சீனு ராமசாமி கூறியது, நடிகர் ராஜேஷ் தான் என்னுடைய வழிகாட்டி. வீரபாண்டிய கட்டபொம்மன் படம் எப்படி ரஷ்யாவுக்கு சென்றதோ அதேபோல் மாமனிதன் திரைப்படம் ரஷ்யாவுக்கு செல்கிறது. மாக்ஸின் கார்கியின் ’தாய்’ நாவல் தான் தென்மேற்கு பருவக்காற்று படம். நான் சினிமாவுக்கு வந்த நோக்கங்கள் தற்போது நிறைவேறி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க பெருமை வாய்ந்த ரஷ்ய நாட்டிற்கு மாமனிதன் படம் செல்ல இருப்பது நினைத்து மிக பெருமை அளிக்கிறது.

-விளம்பரம்-

மாமனிதன் படம் குறித்து சொன்னது:

நான் ரஷ்யாவுக்கு போகவில்லை. ஆனால், மேற்கு தொடர்ச்சி மலை, என் ஊரில் மேய்ந்த கோழியும், மனிதநேயமும், கலாச்சாரமும் தான் போகிறது.திரையரங்கில் 20% ரசிகர்களோடு மாமனிதன் திரைப்படம் ஓடி முடித்தது. நீங்கள் தான் எட்டு படம் எடுத்து விட்டீர்களே ஒரு படம் தானே டிவியில் அனைத்து மக்களும் பார்ப்பார்கள் என்றார்கள். 8 பிள்ளை பெற்றாலும், உயிரோடு இருக்கும் ஒரு பிள்ளையை பார்க்க வேண்டாமா? ஆனால் இந்த ஒரு பிள்ளை தற்போது உலக ஒலிம்பிக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

விஜய் சேதுபதி குறித்து சொன்னது:

விஜய் சேதுபதியின் நடிப்பு உலகம் முழுவதும் தெரிய வேண்டும். உலக அரங்கில் மாமனிதன் திரைப்படம் தற்போது வரை 650 முறை திரையிடப்பட்டு ஈ இருக்கிறது. அதோடு OTT மூலம் மாமனிதன் திரைப்படம் 51 கோடி வசூல் செய்து இருக்கிறது. திரையரங்கில் வெற்றி பெற முடியாத படம் ஓடிடியில் வெற்றி பெற்று இருக்கிறது. மேலும், விஜய் சேதுபதியுடன் இணையும் வாய்ப்பு இனி கிடையாது. 12 ஆண்டு காலத்தில் நான்கு படங்களை விஜய் சேதுபதியுடன் சேர்ந்து இயக்கியுள்ளேன். நான் இறந்தாலும் இந்த படங்கள் பேசும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement