கீர்த்தி சுரேஷை தொடர்ந்து உடல் எடை பிரச்சனையால் அமீர் கான் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விஜய் சேதுபதி.

0
17157
- Advertisement -

அமீர் கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக்கப்பட்ட காரணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய நாளிலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். தற்போது இவர் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் துணை கதாபத்திரத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

ஹீரோவாக மட்டுமல்லாமல் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வருகிறார். அதிலும் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த பின்னர் விஜய் சேதுபதியின் மார்கெட் வேற லெவலில் சென்று விட்டது. அதிலும் பாலிவுட்டில் இருந்து பல்வேறு வாய்புகள் வரிசையில் நின்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த அமீர் கான் படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி கடந்த ஆண்டு அமீர் கானின் ‘லால் சிங்’ என்ற படத்தில் கமிட் ஆகி இருந்தார். கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கப்படாமலே இருந்தது. ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற Forrest Gump படத்தின் ரீ- மேக்கில் அமீர் கான் நாயகனாக நடிக்க இருந்தார்.மேலும், இந்த படத்தில் benjamin buford நடித்த Bubba என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. Benjamin Buford படத்தில் bubba கதாபாத்திரம் மிகவும் முக்கிய கத்தபதிராமக இருந்தது. லால் சிங் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு தமிழனாக நடிப்பதாக இருந்தார்.

Vijay Sethupathi in “Master” & Bubba in “Forrest Gump”

ஆனால் , இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தமான போது இருந்த உடல் எடையை விட தற்போது விஜய் சேதுபதியின் உடல் எடை கூடி இருப்பதால் இந்த படத்தில் இருந்து அவரை அமீர் கான் நீக்கியதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து விளக்கப்பட்டதாக வந்த செய்தி குறித்து பிரபல இந்தியா டுடேவில் வந்துள்ள தகவலின்படி கொரோனா பிரச்சனைக்கு பின்னர் நடிகர் விஜய் சேதுபதி பல்வேறு படங்களில் கமிட் ஆனதால் ‘லால் சிங்’ படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும் தன்னுடைய கதாபாத்திரத்தில் நடிக்க வேறு யாராவது பொருத்தமான நடிகரை தேர்வு செய்துகொள்ளாமாறு அமீர் கானிடன் வேணுகோள் வைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கன்வே நடிகை கீர்த்தி சுரேஷ்,இந்தியில் அஜய் தேவ்கன் படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்தார். ஆனால், படத்தின் கதாபாத்திரத்தை விட கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்துவிட்டார் என்று அவரை அந்த படத்தில் இருந்து விளக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement