வேஷ்டி சட்டையில் ஹர்பஜன், பாவாடை தாவணியில் லாஸ்லியா – வெளியான பிரண்ட்ஷிப் படத்தின் கலக்கல் புகைப்படங்கள் (இந்த குக்கு வித் கோமாளி பிரபலம் வேற இருக்காரு)

0
1854
losliya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனையோ புது முகங்களுக்கு தமிழ் சினிமாவில் பாதையை வகுத்துக் கொடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பல்வேறு பரிச்சயமில்லாத முகங்கள் கலந்து கொண்டார்கள். இதில் தர்ஷன் முகேன், லாஸ்லியா போன்ற பலரும் ரசிகர்களுக்கு புதுமுகமாக தான் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமானார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மூவருக்குமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட பிரபலம் கிடைத்தது.

-விளம்பரம்-

அதிலும் குறிப்பாக லாஸ்லியாவின் புகழ் கொடிகட்டி பறந்து வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பங்குபெற்ற முகேன் மற்றும் தரிசனை விட லாஸ்லியா தான் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் கமிட்டானார். அதன் பின்னர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கமிட்டாகி இருந்தார்.

இதையும் பாருங்க : கீர்த்தி சுரேஷை தொடர்ந்து உடல் எடை பிரச்சனையால் அமீர் கான் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விஜய் சேதுபதி.

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் என்று அடுத்தடுத்து வெளியாக இருந்தது. லாஸ்லியா நடிக்கும் படத்தில் அர்ஜுன், ஹர்பஜன், சதீஷ் மட்டுமல்ல குக்கு வித் கோமாளி பிரபலம் பாலாவும் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி புகைப்படங்கள் வெளியானது. அதில் வேஷ்டி சட்டையில் ஹர்பஜனும் பாவாடை சட்டையில் லாஸ்லியாவும் செம குத்தாட்டம் போட்டுள்ளது போல தெரிகிறது.

இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிக் பாஸ் சீசன் 3 பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடிக்கஇருக்கிறார். கே எஸ் ரவிகுமார் தயாரிக்கும் இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் தர்ஷனின் தந்தையாக நடிக்க இருக்கிறார் கே எஸ் ரவிக்குமார். சமீபித்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. பிக் பாஸுக்கு பின் கவினுடன் ஜோடி சேர்ந்து நடிப்பார் என்று என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது லாஸ்லியா தர்சனுடன் ஜோடி போட்டுள்ளார். அதே போல கே ஸ் ரவிகுமார் 21 ஆண்டுகளுக்கு முன் கமல் நடித்த தெனாலி படத்தை தயாரித்து இருந்தார். அதன் பின்னர் வேறு எந்த படத்தையும் தயாரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement