இயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் 1964-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் ரவிச்சந்திரன். இயல்பான நடிப்பாலும், மிரட்டல் வில்லனாகவும் ரசிகர்களை கவர்ந்தவர்.மேலும், தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவருக்கு பாலாஜி, அம்சவர்தன் என்ற இரு மகன்களும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.
இதையும் படியுங்க : கருப்பன் பட நடிகையா இப்படி ஒரு உடையில் போஸ் கொடுத்துள்ளார்.!
இதில் லாவண்யாவின் மகள் தான் விஜய் சேதுபதி நடித்த கருப்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர். கருப்பன் படத்திற்கு முன்பாக தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிரிந்தாவனம் ‘ போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், கருப்பன் படம் தான் இவருக்கு ஒரு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.
கருப்பன் படத்திற்கு பின்னர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது தமிழில் மாயோன் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.