வெளியான ஜவான் பட ட்ரைலர் – விஜய் சேதுபதி லுக்கை கண்டு நெட்டிசன்களின் Reaction இதோ.

0
1873
Vjs
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கி வருகிறார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன்,  ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார். ஜவான் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. அதில் ஷாருக்கான் பற்றி நடிகர் விஜய் சேதுபதி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

-விளம்பரம்-

அட்லீ – விஜய்:

இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதி விஜய் ஆக ஆனதே மெர்சல் படத்திற்குப் பிறகு தான். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயை வைத்து பிகில் என்ற படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் அவர்கள் ராயப்பன், மைக்கேல் என்று அப்பா – மகன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

- Advertisement -

விஜய் சேதுபதி பேச்சு :

விஜய் சேதுபதி கூருகையில் “எனக்கு அட்லீயின் திரைப்படங்களில் அவரோட ‘தெறி’ படம் ரொம்பப் பிடிக்கும். இந்தப் திரைபடத்தில் படம் அட்லியாலதான் தொடங்கியது. இதில் நான் நடிக்க அவர்தான் காரணம். அட்லிக்குக் கதாபாத்திரங்களை இயக்க மட்டுமில்லை, ஒரு மனுஷன எப்படி கையாளணும் என்பதும் நல்லா தெரியும். இந்த திரைபடத்தில் அட்லீ என்னை அதிகம் வேலை வாங்கினார்.

நான் ஒரு சின்ன வயதில் ஒரு பொண்ண லவ் பண்ணினேன். ஆனால், நான் லவ் பண்ண அந்தப் பொண்ணு ஷாருக்கானை லவ் பண்றேன்னு சொல்லிடுச்சு. அவரை பழிவாங்க எனக்கு இத்தனை வருஷம் ஆகிவிட்டது. ஒவ்வொரு சீன்லையும் அவராகவே சில ‘இன்புட்ஸ்’ சேர்த்துக் கொள்வார்” என்று யோகி பாபுவைப் புகழ்ந்தார். படத்தின் ஷூட்டிங்ல சீன் லாம் சொல்லி முடிச்ச பிறகு யோகி பாபு ‘பாத்துக்கலாம்னு’ சொல்லுவார்.

-விளம்பரம்-

கலாய்த்த ஷாருக்கான் :

மேலும் விஜய் சேதுபதியிடம் உங்களுக்கு எந்த இந்தி நடிகையுடன் நடிக்க ஆசை படுறீங்க என்று கேள்வியை கேட்டனர். அதற்க்கு அவர் நான் தற்போது கத்ரீனா கைப் கூட தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறேன் அது சில நாட்களில் வெளியாக உள்ளது. என்று கூறினார்.விஜய் சேதுபதியின் பேச்சை கேட்டுவிட்ட பிறகு ஷாருக்கான் கூறுகையில் “நீங்கள் என்னை வேண்டுமானாலும் பழிவாங்கலாம் ஆனால் என்னுடைய ரசிகர்களை உங்களால்  என்னிடம் இருந்து வாங்க முடியாது என்றும் பேசி இருந்தார்.

விஜய் சேதுபதியின் லுக் :

இந்த திரைப்படம் விரைவில் வெள்ளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஆக்சன் பேக்காக அமைந்துள்ள அந்த ட்ரைலரில் விஜய் சேதுபதி ஒரு வயதான கெட்டப்பில் மிரட்டு இருக்கிறார். பலரும் விஜய் சேதுபதி லுக்கை புகழ்ந்து தள்ளும் அதே வேளையில் ஓரு சில நெட்டிசன்கள் இது என்ன லுக் என்று கேலி செய்து வருகின்றனர். விஜய் சேதுபதியின் இந்த லுக்கிற்கு உங்கள் கமண்ட் என்ன ?

Advertisement