ஜல்லிக்கட்டு விவகாரம் டூ பெங்களூரு விமான நிலையம் வரை – விஜய் சேதுபதி சந்தித்த 5 சர்ச்சைகள்.

0
358
vijaysethupathy
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய்சேதுபதி. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது வழங்கப்பட்டு இருந்தது. இது குறித்து பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இப்படி சினிமா உலகில் உச்சத்தில் இருந்தாலும் இவர் பல சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறார். அவற்றைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

ஜல்லிக்கட்டு போராட்டம் :

சினிமாவில் பஞ்ச் வசனங்கள் எல்லாம் பேசி ஹீரோவாக இருக்கும் விஜய் சேதுபதி நிஜ வாழ்க்கையிலும் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எந்த அரசியல் கட்சி தலைவர்களையும், போராட்டக்காரர்களையும் அனுமதிக்க வில்லை. ஆனால், மக்களின் ஆதரவு பெற்ற சில நடிகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். அதில் மக்களுக்கு குரல் கொடுத்து நின்றவர் விஜய் சேதுபதி. அந்த போராட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை சொல்லி மத்திய மாநில அரசை விமர்சித்து பயங்கரமாக பேசியிருந்தார் விஜய் சேதுபதி.

- Advertisement -

காஷ்மீர் விவகாரம் :

ரஜினிகாந்த் சொன்ன அதே நாளில் காஷ்மீர் விவகாரம் குறித்து தன்னுடைய கருத்தை விஜய் சேதுபதி பகிர்ந்தார். காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், அந்த மாநில மக்களுடைய பிரச்சினைகளுக்கு அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி கூறியிருந்தார். இதனால் இந்த விவகாரம் குறித்து பாரதிய ஜனதா மற்றும் அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் எதிர்ப்புக்கு உள்ளானது.

800 திரைப்பட சர்ச்சை :

மிஷன் கஷ்மிர் ஆபரேஷனை வெற்றிகரமாக செய்து முடித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோருக்கு ரஜினிகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். மேலும், அமித் ஷாவும், பிரதமர் மோடியும் கிருஷ்ணர்,அர்ஜுனன் போன்றவர்கள் என்றும் விஜய் சேதுபதி கூறியிருந்தார். கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 800 என்னும் திரைப்படத்தில் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இதனால் தமிழகத்தில் பல எதிர்ப்புகள் எழுந்தது.

-விளம்பரம்-

விளம்பர சர்ச்சை :

பின்னர் அந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி பின் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. விவசாயிகளுக்கான ஆன்லைன் வர்த்தக செயலின் மண்டி எனும் ஆன்லைன் செயலி விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனால் வியாபாரிகள் மத்தியில் விஜய் சேதுபதிக்கு பயங்கரமான எதிர்ப்பு கிளம்பியது. இது போன்ற விளம்பரங்களால் உள்ளூர் வியாபாரிகளின் நலன் கெடும். அதனால் விஜய் சேதுபதி இது போன்ற விளம்பரங்களில் நடிக்க கூடாது என்றும் இரட்டை வேடம் போடுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்கள். இதனால் விஜய் சேதுபதி அலுவலகம் மற்றும் வீடு முன்பு ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நடந்திருந்தது.

விமான நிலையத்தில் தாக்குதல் :

கடந்த மாதம் பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் பின்னாலிருந்து தாக்குவது போன்ற வீடியோ வெளிவந்து சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும், விஜய் சேதுபதியை தாக்கிய நபர் மகா காந்தி. இவர் பெங்களூர் விமான நிலையத்தில் விஜய்சேதுபதியை பற்றி தவறான வார்த்தைகளால் திட்டியதனால் விஜய் சேதுபதி தன்னுடைய ஜாதியை குறிப்பிட்டு பேசியதாகவும், அதனால் அவரது மேலாளர் தன்னை தாக்கியதாகவும் கூறி அவர்கள் இருவர் மீதும் கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் ஜனவரி 4ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்கள். இப்படி விஜய் சேதுபதி சினிமாவில் உச்சத்திற்கு மேல் உச்சம் சென்றிருந்தாலும் நிஜ வாழ்க்கையில் பல பிரச்சனைகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். இதுகுறித்து சினிமாவில் பல சலசலப்புகள் எழுந்து வருகிறது

Advertisement