மகளின் 37வது நினைவு நாள் – தன் மகன் விஜய் மற்றும் மகளுடன் எடுத்த அறிய புகைப்படத்தை பகிர்ந்து Sac போட்ட உருக்கமான பதிவு.

0
465
Sac
- Advertisement -

தனது மகளின் இறந்த நாளில் எஸ் ஏ சி உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய். இவரது படங்கள் என்றாலே அது ஹிட்டோ பிளாப்போ, ஆனால் சூப்பர் டூப்பர் வசூல் கலெக்ஷன் தான். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி இருந்த பீஸ்ட் திரைப்படம் கூட 300 கோடி வசூல் சாதனை செய்திருந்தது. விஜய்யின் குடும்பத்தை பற்றி அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே அறிந்த ஒரு விடயம் தான். அதே போல, அவருக்கு ஒரு தங்கை இருந்தார் என்பதும் அவர் சிறுவதிலேயே இருந்துவிட்டார் என்பதும் அறிந்த விடயம் தான்.

-விளம்பரம்-

சிறு வயதில் நடிகர் விஜய் மிகவும் துருதுருவென மிகவும் சுட்டித்தனமாக இருப்பாராம். ஆனால், தங்கையின் இறப்பு அவரை பெரிதும் பாதித்தது. தங்கையின் இறப்பிற்கு பின்னர் தான் விஜய் மிகவும் அமைதியாக ஆகிவிட்டார் என்று அவரது பெற்றோர்கள் கூட பல முறை கூறி இருக்கின்றனர். விஜய்யின் தங்கைக்கு லுக்கிமியா என்ற நோய் பாதித்த இருந்தது. இதுவும் ஒரு வகை புற்று நோய் தான். இது குழந்தைகளை தான் அதிகம் பாதிக்கும்.

- Advertisement -

லுக்கிமியா நோய் :

உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களில் பாதிப்பை ஏற்படுததும். மேலும், இது எலும்பு மஜ்ஜை மற்றும் சில எலும்புகளின் திசுக்களை தாக்கும் புற்றுநோய் வகை. ஆனாலும் இதை எலும்பு புற்றுநோயாக கணக்கில் எடுத்து கொள்வதில்லை. இப்படி ஒரு நோயால் தான் விஜய்யின் தங்கை இறந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மகளின் இறப்பு குறித்து பேசிய எஸ் ஏ சி ‘ விஜய்க்கு அவர் தங்கை தான் உலகம்.

அப்பா…’னு கதறின விஜயோட குரல் :

அவளோட தினம் ஒரு வெளையாட்டு வெளையாடுவார். ஒரு கூடையில்  வித்யாவை வைச்சுட்டு தலைக்குமேல் தூக்கிட்டு தலையைச்சுத்தி விளையாடுவார்.  இது ஒரு நாள், ரெண்டு நாள் இல்ல… பல நாள் தொடர்கதையா நடந்து வந்துச்சு. ஒருநாள் தலையைச் சுத்தும்போது கைதவறி வித்யா தலை குப்புற விழுந்து விட்டாள் அவ்வளவுதான் ‘அம்மா…’னு விஜய் போட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீட்ல இருந்தவங்கள்லாம் ஓடிவந்துட்டாங்க.

-விளம்பரம்-

குடும்பத்தோட ஒட்டுமொத்த சந்தோஷமும் பறிபோச்சு

பயந்துட்டே வித்யாவை தூக்கினோம். ஆனா, ஆச்சர்யம் அவ உடம்புல ஒரு சின்ன கீறல்கூட இல்லை.  இப்போ நினைச்சாலும் ஆச்சர்யமா இருக்கும்.  வீட்டுக்குவந்த எல்லோரும் ‘வித்யாவுக்கு ஆயுசு கெட்டி’னு நெகிழ்ந்து வாழ்த்திட்டுப் போனாங்க. ஆனா,  அந்த வாழ்த்து கொஞ்ச நாள் கூட நிலைக்கல.வித்யாவுக்கு மூன்றரை வயசு ஆச்சு. அப்போ விஜய்க்கு 9 வயசு இருக்கும்.  வித்யாவுக்கு லுக்மியானு ஒரு நோய் வந்தது. எங்கள் குடும்பத்தோட ஒட்டுமொத்த சந்தோஷமும் பறிபோச்சு.

37வது-ஆண்டு நினைவுநாள் :

ஒருநாள்  விஜய் ப‌க்கத்துல இருக்கிறப்பவே கொஞ்சம் கொஞ்சமா மெல்ல மெல்ல மூச்சு திணறியபடி வித்யா கண்மூடிட்டா. தன்னோட கண் எதிரே தன் தங்கை கண் மூடினத விஜயால தாங்க முடியாம ‘அப்பா…’னு  கதறின விஜயோட குரல் இப்ப வரைக்கும் என் காதுல கேட்டுட்டேதான் இருக்கு. எங்க குடும்பத்துல ஈடு செய்ய முடியாத இழப்பு… வித்யா! என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இன்று வித்யாவின் 37வது-ஆண்டு நினைவுநாளில் ‘என் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று மே – 20’ என்று உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

Advertisement