அப்பா கூட தான் பேசறதில்ல, அம்மாகிட்டயும் விஜய் பேசுவது இல்லையா ? – எஸ் ஏ சி வெளியிட்ட வீடியோ.

0
4128
sac
- Advertisement -

சமீபத்தில் இருந்து தளபதி விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே சலசலப்பு சர்ச்சைகள் எல்லாம் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் விஜய்க்கும், அவரது தந்தைக்கும் இடையே இருக்கும் பிரச்சினை முற்றிவிட்டது என சோசியல் மீடியாவில் வந்த தகவலுக்கு எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் தற்போது வீடியோ ஒன்று பகிர்ந்துள்ளார். விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்து இருக்கிறார். ஏனென்றால் ஏற்கனவே நடிகர் விஜய் அவர்கள் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும் மற்ற பணிகளை மேற்கொள்ள கூடாது என்றும் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், தாயார் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இது தொடர்பாக எஸ்ஏ சந்திரசேகரின் மனுவுக்கு விஜய் தரப்பில் விளக்கம் அளிப்பதற்காக அக்டோபர் 29ஆம் தேதி விசாரணையை தள்ளி வைத்துள்ளது நீதிமன்றம். இதனிடையே விஜய்யை பார்ப்பதற்கு எஸ்ஏ சந்திரசேகரும், அவர் மனைவியும் சென்றுள்ளதாகவும் அவர்களை பார்க்க முடியாது என்று விஜய் மறுத்துவிட்டதாகவும் சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தற்போது சந்திரசேகர் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை போட்டுள்ளார்.

இதையும் பாருங்க : பாடையில் படுப்பதுபோல் நடித்தால் பரிகாரம். லஷ்மி அம்மாவிற்கு நடந்த விசித்திரமான செயல பாருங்க.

- Advertisement -

அதில் அவர் கூறியது, சமீபத்தில் நான் பேட்டி கொடுத்து இருந்தது உண்மைதான். அதில் என்னைப் பற்றியும் என்னுடைய படங்களை பற்றியும் கேட்டிருந்தார்கள். பின் நான் சொன்னது எல்லாம் எழுதி இருந்தார்கள். ஆனால், அதில் ஒரே ஒரு சின்ன தவறு மட்டும் நடந்துள்ளது. என்னவென்றால் நானும், ஷோபனாவும் விஜய் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு இருந்ததாகவும் விஜய் ஷோபனாவை மட்டும் அழைத்து என்னை அழைக்காததால் நாங்கள் அங்கிருந்து கோபமாக திரும்பி சென்றதாகவும் எழுதி இருந்தார்கள். அது முற்றிலும் நடக்காத ஒன்று. தவறான விஷயத்தை பதிவிட்டு இருக்கிறார்கள்.

அதற்காக தான் நான் இந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறேன். எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மை தான். நான் எதையும் மறைச்சு பேசவில்லை. ஆனால், விஜய்க்கும் அவர்களுடைய அம்மா அதாவது என்னுடைய மனைவி ஷோபனாவிற்கும் உள்ள பழக்கம் எப்போது போல தான் இருக்கிறது. அவர்களுக்கு இடையே எந்த மனக்கசப்பும் சண்டையும் கிடையாது. விஜய் வீட்டிற்கு வெளியே காரில் ரொம்ப நேரமாக காத்திருந்தது, பிறகு நாங்கள் கோபமாக சென்றது என்ற தகவல்கள் எல்லாம் தவறானது. இந்த மாதிரி யாரும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement