சமீபத்தில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் தன்னுடைய மகன் சஞ்சய் குறித்து
பேசியிருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். மேலும், விஜய்யின் பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பீஸ்ட் படம் பற்றிய தகவல்:
இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் தான் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. ட்ரெய்லரில் ஒரு mallஐ பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். இந்த தீவிரவாத கும்பலில் இருந்து விஜய் எப்படி மக்களைக் காப்பாற்றினார்? என்பது தான் படத்தின் சுவாரஸ்யமே என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் சில தினங்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் மூன்றாவது பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விஜய் மகன் குறித்த தகவல்:
பீஸ்ட் படம் ரிலீசாகும் தேதி நெருங்கி வருவதால் படத்தை பற்றிய தகவல்கள் அடிக்கடி சோசியல் மீடியாவில் வெளியாகி வருவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தன் மகன் சஞ்சய் குறித்து சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். நடிகர் விஜய்க்கு கடந்த 1999 ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் விஜய்க்கு, சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்று மகளும் பிறந்தனர். இவர்கள் இருவருமே விஜய் படத்தில் சிறு வேடங்களிலும் நடித்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அதுபோக சஞ்சய் “ஜங்ஷன் ” என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சஞ்சய் நடித்த ‘சிரி ‘ என்ற குறும்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், சஞ்சய் கனடாவில் சினிமா சம்பந்தமான படிப்பை முடித்துள்ளார்.
நேர்காணல் நிகழ்ச்சியில் விஜய்:
அவர் அடுத்ததாக சினிமாவில் களம் இறங்க இருப்பதாக தொடர்ந்து செய்திகள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. ஆனால், அவர் நடிகராக போறாரா?இயக்குனராக போறாரா? என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் அவர்கள் நடிகர் விஜயுடன் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அப்போது அவர் விஜயின் குடும்பம் பற்றியும் சில கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து, அடுத்ததாக என்ன செய்யப்போகிறார்? அவருக்கு சினிமாவில் ஆர்வம் இருக்கா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு விஜய் அவர்கள் கூறியிருப்பது, அவர் மனதில் என்ன இருக்கு என்று தெரியவில்லை. நான் அவரை வற்புறுத்த மாட்டேன். அவருக்கு பிடித்தால் பண்ணட்டும் என்று விட்டு விட்டேன்.
சஞ்சய் மகன் குறித்து விஜய் கூறியது:
ஒருமுறை பிரேமம் படத்தோட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் என்னை சந்திக்க வீட்டுக்கு வந்தார். பின் ஒரு கதை சொல்லணும் என்று சொன்னார். நானும் சரி சொல்லுங்கள் என்று சொன்னேன். அதற்கு பிறகு தான் உங்க பையன் கிட்ட சொல்லனும் என்று சொன்னார். அந்த கதையை கேட்டேன் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. எப்படியாவது சஞ்சய் இந்த கதையில் நடிக்க ஓகே சொல்லிடுவான் என்று நினைத்தேன். ஆனால், அவன் இப்போதைக்கு எதுவும் வேண்டாம் இரண்டு வருடம் டைம் வேணும் என்று கேட்டான். நானும் சரி என்று சொல்லிவிட்டேன். அவன் கேமராவுக்கு முன்னாடி வேலை பண்ண போறானா? இல்லை பின்னாடி வேலை பண்ண போறானா? என்று தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறினார்.