ஆட்ட நாயகனின் மகன் ஆட்டம் ஆரம்பம் – முதல் படத்தை இயக்க ரெடி – வைரலாகும் வீடியோ

0
569
- Advertisement -

பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடித்த வரசிக்கு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்க தில் ராஜு தயாரித்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியான வாரிசுபடம் 16 நாட்களாகும் நிலையில் வாரிசு படம் குடும்ப பார்வையாளர்கள் மத்தியிலும் வின்டேஜ் விஜய்யை பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் வாரிசு படம் வெளியாகி 2 வாரம் கடந்த நிலையில் சுமார் ரூபாய் 275 கோடி வசூலித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இப்படையே சென்றால் இப்படம் விரைவில் ரூபாய் 300 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தளபதி 67 :

இப்படி வாரிசு வெற்றிக்கு பிறகு தற்போது விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது தளபதி 67ல் நடித்து வருகிறார். இப்படத்தில் சஞ்சய், கெளதம் மேனன், திரிஷா, மிஷ்கின் என பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு அடுத்தாக வட இந்திய பகுதிகளில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ் இன்னும் இலை தினங்களில் அப்டேட் வரும் என்று கூறியுள்ளார்.

கமலஹாசன் கேமியோ :

மேலும் இப்படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்றும் கடந்த விக்ரம் படத்தில் சூரியா என்ட்ரி கொடுத்தது போல இந்த தளபதி 67 பதில் உலகநாயகன் கமலஹாசன் என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படி பட்ட நிலையில் தான் தளபதி விஜய் மகன் சஞ்சய் குறித்த வீடியோ ஓன்று சோசியல் மீடியாவில் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

தாத்தாவை போல பேரன் :

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமா உலகில் ஆர்வம் கொண்டவர். இவருக்கு விஜய் சேதுபதியை வைத்து முதலில் படத்தை இயக்க ஆசை என்றும், பிறகுதான் அப்பாவை வைத்து படம் இயக்குவேன் என்று கூறியுள்ளதாக அவருடைய தாத்தா சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தன்னுடைய தாத்தா எஸ்.ஏ சந்திரசேகரை போல ஒரு இயக்குனராக ஆக வேண்டும் என்று கனடா திரைப்பட கல்லூரியில் படித்து வருகிறார் விஜய் மகன் சஞ்சய்..

வைரலாகும் வீடியோ :

அதாவது விஜய் மகன் சஞ்சய் ஓரு குறும்படத்தை இயக்கி வருகிறார். அந்த குறும்படம் உருவாக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறும்படம் இயக்கம் இவர் அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களை வைத்து இயக்குவார் என்று விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்

Advertisement