வெளிநாட்டில் இருக்கும் தளபதி மகன் – வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

0
10538

சினிமாவைப் பொறுத்தவரை வாரிசு நடிகர்கள் வருவது வாடிக்கையான விஷயம் தான் அந்த வகையில் சிவகுமாரின் மகன்களான சூர்யா, கார்த்தி பாக்கியராஜின் மகன் சாந்தனு, எஸ் ஏ சந்திரசேகரன் மகனான விஜய் என்று எப்படி நடிகர்களை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் விஜய்யின் மகனான சஞ்சய்யும் விரைவில் சினிமாவில் கால்பதிக்க உள்ளார் என்ற செய்தி தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் சஞ்சய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விஜய்க்ககு கடந்த 1999 ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றுது. திருமணத்திற்கு பின்னர் விஜய்க்கு, சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்று மகளும் பிறந்தனர். இவர்கள் இருவருமே விஜய்யின் படத்திலும் சிறு வேடங்களிலும் நடித்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் சஞ்சய், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் , அடிச்சாதாங்கமாட்ட , என்ற பாடலில் ஒரு சிறு காட்சியில் நடன மாடியிருந்தார்.அதுபோக சஞ்சய் “ஜங்ஷன் ” என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார்.

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த குறும்படம் வெளியான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சஞ்சய் நடித்த ‘சிரி ‘ என்ற மற்றும் ஒரு குறும்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இந்த நிலையில் சஞ்சய்யின் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சஞ்சய் சினிமாவில் நடிக்க போகிறார் என்று விஜய் குடும்பத்தின் நெருங்கிய ரசிகரான மகேஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விஜய்யின் தீவிர ரசிகரான மகேஷ் வீட்டிற்கு விஜய்யின் பெற்றோர்கள் அடிக்கடி செல்வதும் வழக்கம். சமீபித்தில் கூட இவரது வீட்டிற்கு சென்ற ஷோபனா சமையல் கூட செய்திருந்தார். இந்த நிலையில் தொலைபேசி பேட்டி ஒன்றில் பங்கேற்ற மகேஷ், விஜய்யின் மகன் சஞ்சய் இந்த வருட இறுதியில் கனடாவில் தனது படிப்பை முடிக்கிறார். அடுத்த வருடமே சினிமாவில் அவர் மாஸ் எண்ட்ரீ கொடுக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement