மாநாட்டிற்கு பின் தவெக தலைவர் விஜய் செய்து இருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் விஜய்யின் மாநாடு குறித்த செய்தி தான் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் தன் கட்சியின் பெயரை விஜய் அறிவித்திருந்தார்.
அதோடு வருகின்ற 2006 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிடுவதாக விஜய் அறிவித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் தன் கட்சி கொடியை ஏற்றி உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி இருந்தார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, வி.சாலையில் நேற்று அக்டோபர் 27ஆம் தேதி தனது முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார் தலைவர் விஜய்.
தவெக முதல் மாநாடு:
மேலும், மாநாட்டில் முழு அரசியல் தலைவனாக விஜய் பேசியிருந்தது பலரையுமே மெய்மறக்க வைத்தது. அதோடு இந்த மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டு வந்திருந்தார்கள்.
இதை பார்த்த விஜய் எமோஷனல் ஆகி கண்கலங்கி இருந்தார். அதேபோல் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விஜய்னுடைய பேச்சும் அனல் பறக்க இருந்தது. அதற்குப்பின் மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதற்கு பிறகு கட்சி பாடல் முடிந்தவுடன் விஜய் மேடைக்கு வந்தார்.
தவெக கொள்கை:
அங்கு அமைக்கப்பட்டிருக்கும் ரேம்பில் விஜய் அவர்கள் தொண்டர்களை பார்த்து கையசைத்தப்படி உற்சாகத்துடன் நடந்து இருந்தார். பின், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன ஆதியோன் திருவள்ளுவர் வழியில் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவராக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரையும், பெருந்தலைவர் காமராஜரையும், அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரையும், வீரத்தமிழ் மங்கை வேலுநாச்சியாரையும், மக்கள் சேவகர் அஞ்சலையம்மாளையும் நம்முடைய அரசியல் வழிகாட்டிகளாக ஏற்று, சாதி, மத, பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளோடு தமிழக வெற்றிக் கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்கனும்னு நான் வரேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை கூறப்பட்டது.
மாநாட்டில் விஜய் சொன்னது:
அதற்குப்பின் மேடைக்கு வந்த விஜய், சினிமாவில் நடிக்கலாம், பணம் சம்பாதிக்கலாம் என்றுதான் முதலில் இருந்தேன். சினிமாவில் சம்பாதித்து விட்டு செல்லாமல் என்னை வாழ வைத்த மக்களுக்கு நல்லது செய்ய என்ன செய்வது? என்று யோசித்தேன். அப்போதுதான் அரசியல் நினைவிற்கு வந்தது. அதனால் தான் பெரியாருக்கு பிறகு எங்களுடைய கொள்கையின் தலைவர்கள் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர்,அண்ணல் அம்பேத்கர்,வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள். அதேபோல் இங்கே ஒரு கூட்டம் கொஞ்சம் காலமாகவே ஒரே பாட்டை பாடிக்கொண்டு யார் அரசியலுக்கு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட கலரை அவர்கள் மீது பூசி விட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் பாண்டிய மன்னன் குட்டி ஸ்டோரி குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.
விஜய் செய்த செயல்:
இந்நிலையில் மாநாடு முடிந்த பிறகு விஜய் செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மாநாட்டின் போது விஜய்க்கு குர்ஆன், பகவத் கீதை, பைபிள் என்று மூன்று மதங்களையும் சம்பந்தப்பட்ட புத்தகங்களை அன்பாக கொடுத்திருந்தார்கள். அதை மாநாடு முடிந்த பின் விஜய் அவர்கள் தன் கையை கையில் எடுத்துக்கொண்டு வந்திருந்தார். அது மட்டும் இல்லாமல் விஜயை பார்த்தவுடன் நடிகரும், கட்சியின் நிர்வாகியுமான சௌந்தரராஜா அவர்கள் விஜயை பார்த்து கட்டி அணைத்து, அண்ணா கிழிச்சிட்டீங்க என்று பாராட்டி இருந்தார். விஜயும் அவரை அரவணைத்து நன்றி சொல்லிவிட்டு சென்றிருந்தார்.