பத்து தல இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பபட்ட விஜய்யின் வீடியோ – என்ன தெரியுமா ?

0
705
- Advertisement -

சிம்புவின் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்ட விஜயின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

பின் இடையில் இவரின் படங்கள் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். பின் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

சிம்பு திரைப்பயணம்:

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்ததாக மகா திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து கடந்த ஆண்டு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறர்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறது.

பத்து தல படம்:

மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பத்து தல. இந்த படத்தை இயக்குனர் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் கன்னடத்தில் சிவராஜ் குமார் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த மஃப்டி படத்தின் தமிழ் ரிமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

படத்தின் இசை வெளியீட்டு விழா:

மேலும், இந்த படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. இதில் பட குழுவினர் பலரும் கலந்துகொண்டு உரையாடி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் பத்துதல படத்திற்காக சிம்பு அவர்கள் உடல் எடையை கொஞ்சம் அதிகரித்து இருந்தார்.

ட்ரெண்டிங் ஆகும் விஜய் வீடியோ:

இது அனைவரும் அறிந்ததே. தற்போது அடுத்த படத்திற்காக சிம்பு மீண்டும் உடல் எடையை குறைத்திருக்கிறார். இந்த நிலையில் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசி இருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, வாரிசு படத்தில் சிம்பு அவர்கள் தீ தளபதி என்ற பாடலை பாடியிருந்தார். இதனால் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அவர்கள் சிம்புவுக்கு நன்றி தெரிவித்து பேசி இருந்தார். அந்த வீடியோவை தான் தற்போது பத்து தல இசை வெளியீட்டு விழாவில் காண்பித்து இருக்கிறார்கள். இதை விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement