‘நண்பர்கள்ன்னு நீங்க தானடா இருக்கீங்க’ – நண்பன் படத்தின் போது 6 மாதம் சஞ்சீவுடன் பேசாமல் இருந்துள்ள விஜய்.

0
2441
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய், அவரது அப்பா சந்திரசேகர் மூலமாக திரையுலகிற்கு வந்தாலும் தனது தனிப்பட்ட திறமையால் இன்று ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். விஜய்யை பொறுத்த வரை அவர் படப்பிடிப்பில் மிகவும் அமைதியாக இருப்பார். யாருடன் அவ்வளவாக பேச மாட்டார் என்று தான் அவருடன் பணியாற்றியவர்கள் கூறுவார்கள். ஆனால், விஜயின் மறுபக்கத்தை அறிந்திருப்பது அவர்களது நண்பர்கள் மட்டும் தான்.

-விளம்பரம்-

விஜய் நண்பர்கள் குறித்து அவரது தாய் கூறுவது என்னவென்றால். விஜய் நண்பர்கள் சஞ்சீவ், ஸ்ரீசாந்த்,மனோஜ்,ராம்குமார். அவர்களுடன் சேர்த்து விஜய் ஐந்து பேர். இதில் சஞ்சீவ் விஜய் நெருங்கிய நண்பர்கள் சஞ்சீவ் மட்டுமில்லாமல் அவர் குடும்பத்தாரும் விஜய்யுடன் மிகவும் நெருக்கமானவர்கள். இதில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகர் சஞ்சீவ் தான். இவர் விஜய்யின் பல படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

நடிகர் சஞ்சீவ் 1989 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச் செல்வன் என்ற படத்தில் அறிமுகமானார் அதன்பின்னர் சந்திரலேகா நிலாவே வா பத்ரி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்து இருந்தார். தற்போது நீண்ட வருடங்களுக்கு பின்னர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார் சஞ்சீவ். என்னதான் விஜய்க்கு நெருங்கிய நண்பர் என்றாலும் விஜயிடம் இதுவரை தொழில் ரீதியாக எந்த ஒரு உதவியையும் கேட்டதில்லை சஞ்சீவ்.

ஆனால், நட்பு ரீதியில் கேட்காமல் பல உதவிகளை செய்துள்ளாராம் விஜய். கொரோனா காலகட்டத்தில் கூட சஞ்சீவ்விற்கு கொரோனா வந்து வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது விஜய் தான் அவருக்கு வந்து சாப்பாடு கொடுத்துள்ளார். கொரோனாவை ற்றி கூட கவலைப்படாமல் தனது நண்பனுக்கு உதவிய விஜய், இதே சஞ்சீவுடன் 6 மாத காலம் பேசாமல் கூட இருந்து இருக்கிறாராம்.

-விளம்பரம்-

விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தின் போது விஜய் டிவியில் ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த நிகழ்ச்சியில் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆனால், சஞ்சீவ் மட்டும் திருமதி செல்வம் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் அவரால் வர முடியவில்லையாம். இதனால் கடுப்பான விஜய் ‘என்னை விட அப்படி என்ன வேலை’ என்று கோபப்பட்டு 6 மாதம் பேசவே இல்லையாம்.

Advertisement