ஹீரோவாக சூர்யா-வில்லனாக விஜய் நடிக்க இருந்த மாஸ் கூட்டணி- 100 நாட்கள் ஒட்டிய படம். என்னனு தெரியுமா?

0
1052
vijay
- Advertisement -

வில்லனாக விஜய்- ஹீரோவாக சூர்யா கூட்டணியில் அமைந்த படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து கொண்டிருப்பவர்கள் விஜய் மற்றும் சூர்யா. இருவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. அந்த வகையில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளிவந்த கமலின் விக்ரம் படத்தில் சூர்யா கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றிருந்தார். அதேபோல் மாதவன் நடிப்பில் வெளியாகி இருந்த ராக்கெட்டரி தி எபெக்ட் என்ற படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடித்திருந்தார். தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

- Advertisement -

விஜய் திரைப்பயணம்:

அதேபோல் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. தற்போது விஜய் அவர்கள் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். வம்சி பைடிபள்ளி இந்த படத்தை இயக்குகிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணி புரிந்து இருக்கிறார்கள்.

விஜய் நடிக்கும் படம்:

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இதனை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் விஜய் அவர்கள் தளபதி 67 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் விஜய் வில்லனாக, சூர்யா ஹீரோவாக நடிக்க இருந்த படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய்-சூர்யா இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் நேருக்கு நேர்.

-விளம்பரம்-

சூர்யா- விஜய் கூட்டணி:

இந்த படத்தின் மூலம் தான் நடிகர் சூர்யா திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் ப்ரெண்ட்ஸ் என்ற திரைப்படத்தில் சேர்ந்து நடித்து இருந்தனர். ஆனால், அதன் பின் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வரவில்லை. இதற்கிடையே கடந்த 1998ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிரியமுடன். முதல் முறையாக விஜய் இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்று 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி இருந்தது.

ப்ரியமுடன் படம்:

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு நிகராக அவரின் நண்பர் கதாபாத்திரம் இருக்கும். வசந்த் குமார் என்ற கதாபாத்திரத்தில் Sujith Sagar நடித்திருந்தார். ஆனால், அந்த கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவை நடிக்க வைக்கத்தான் நினைத்தார் இயக்குனர் வின்சென்ட் செல்வா. அந்த கதாபாத்திரம் விஜயின் கதாபாத்திரத்தை விட பலமாக அதிக வாய்ப்பாக இருந்தது. ஆனால், இந்த கதாபாத்திரம் பெரிய பலமாக இருந்ததால் நடிகர் சூர்யா வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் முடிவெடுத்து விட்டார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து சூர்யா- விஜய் கூட்டணியில் இருந்திருந்தால் இந்த படம் மாஸாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement