விஜய் மகனுடன் ஜோடியா நடிக்கணும். இப்பொவே கொக்கி போட்ட விஜய் டிவியின் 17 வயது நடிகை.

0
33368
vijay
- Advertisement -

உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமாஉலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து. தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடியிருப்பார் சஞ்சய். அதனை தொடர்ந்து சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
vijay-son

ஜேசன் சஞ்சய் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு படித்து வருகிறார். ஜேசன் சஞ்சய் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அவர்கள் தமிழ் சினிமா உலகில் கூடிய விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதையும் பாருங்க : PSBB பள்ளி பத்தி இவ்ளோ பெருமை பேசும் மதுவந்தி பையன் எந்த ஸ்கூல்ல படிக்கிறார் தெரியுமா ? நீங்களே பாருங்க.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விஜய்யுடன் நடிக்க ஆசை என்று விஜய் டிவியின் இளம் நடிகையான ரவீனா தாஹா கூறியுள்ளார். தமிழில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தில் அம்மு அபிராமியின் பள்ளித் தோழியாக நடித்தவர் நடிகை ரவீனா தாஹா. ரவீனா ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

This image has an empty alt attribute; its file name is 1-116-1024x670.jpg

அதே போல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 தொடரிலும் முதன்மை கதாபத்திரத்தில் நடித்து வருகிறார் ரவீனா. 17 வயதான இவருக்கு தற்போது இளசுகளின் ரசிகர்கள் தான் அதிகம். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், தனக்கு சினிமாவில் நாயகியாக நடித்து சாதிக்க வேண்டும் என்பதே தன் லட்சியம் என்றும் அதிலும் விஜய்யின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement