இந்த இரண்டு மத முறைப்படி தான் எங்கள் திருமணத்தை நடத்தப்போறோம், அதுக்கு இதான் காரணம் – கல்யாண பிளான் பகிரும் விஜய் டிவி அஜய்.

0
1006
ajay
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ஒன்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்றவர் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் போல் அப்படியே பாடி பலமுறை வியக்க வைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

அஜய் கிருஷ்ணா சென்னையை சேர்ந்தவர். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு படங்களில் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் இவர் பாடல்களை பாடியும் வருகிறார். மேலும், பாடகர் அஜய் கிருஷ்ணாவுக்கு ஜெஸ்ஸி என்பவருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.

- Advertisement -

அஜய் கிருஷ்ணா அளித்த பேட்டி:

இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அஜய் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்களைக் கூறி இருந்தார்கள். இந்நிலையில் அஜய் திருமண வேலையில் பிஸியாக இருந்தாலும் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திருமணம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, என் வாழ்க்கையில் எல்லாமே எனக்கு அம்மா தான். அவர் இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. இந்த தருணத்தில் அவங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். எனக்கு மூன்று அக்கா. மூத்த அக்காவுக்கு மட்டும் தான் திருமணம் முடிந்து இருக்கிறது. இரண்டாவது அக்காவுக்கு கல்யாணத்தில் உடன்பாடு இல்லை என்று சொல்லிவிட்டார்.

அஜய் கிருஷ்ணா-ஜெஸ்ஸி காதல்:

மூன்றாவது அக்கா இரண்டாவது அக்காவுடைய திருமணத்துக்கு பிறகு தான் திருமணம் பண்ணிப்பேன் என்று சொல்லிவிட்டார். பின் அவர்கள் எனக்காக பெண் பார்க்க நினைத்த போதுதான் நான் என்னுடைய காதலை சொன்னேன். பிறகு ஜெஸியை என் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். அவர்களும் என்னை புரிந்து கொண்டு என்னுடைய திருமணத்திற்கு சரி என்று சொல்லி விட்டார்கள். கண்ணான கண்ணே என்ற பாடலை நான் பாடின வீடியோவை பார்த்துட்டு தான் அவர்கள் இன்ஸ்டாகிராமில் எனக்கு மெசேஜ் அனுப்பினார்கள். அப்படி தான் எங்களுடைய நட்பு தொடர்ந்தது. நண்பர்களாக ரெண்டு பேரும் பேச ஆரம்பித்தோம். ஒரு நாள் அவர்களை நேரில் சந்தித்து பேசினேன்.

-விளம்பரம்-

அஜய் கிருஷ்ணா-ஜெஸ்ஸி திருமணம் முறை:

அப்போது நாங்க ரெண்டு பேரும் மனம் விட்டு பேச ஆரம்பித்தோம். நட்பாக இருந்த எங்களுடைய உறவு காதலாக மாறியது. மேலும், நாங்கள் இருவரும் காதலிப்பதை வீட்டில் சொன்னோம். இரண்டு பேருடைய வீட்டிலும் எங்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்கள். ஆனால், ஜெஸ்ஸி கிறிஸ்டியன், நான் இந்து என்பதனால் பெரிய தடையாக இருந்தது. பிறகு ரெண்டு குடும்பத்திலும் பேசி புரிய வைத்தோம். உடனே நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். இல்லையென்றால் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து விட்டால் ரொம்ப கஷ்டமாகி விடும் என்று பயந்தேன். நாங்கள் ரெண்டு பேருமே சேர்ந்து திருமணத்திற்கு தேவையான விஷயங்களை பார்த்து பண்ணி கொண்டு வருகிறோம். திருமணத்துக்கு பிறகு குடும்பத்தை நடத்துவதில் இருக்கும் மேடு பள்ளம் தெரியும்.

அஜய் கிருஷ்ணா-ஜெஸ்ஸி திருமணம் தேதி:

எல்லா கரடுமுரடான பாதைகளிலும் ஜெஸ்ஸி கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு பயணிப்பேன். எங்களுடைய நிச்சயதார்த்தம் முடிந்தது கல்யாண ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டோம். என்னதான் நிச்சயதார்த்த முடிந்தாலும் கல்யாணம் முடியும் வரை எனக்குள் பயம் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. படம் கூட எடுக்கலாம் போல கல்யாணம் முடிப்பது ஒரு மிகப் பெரிய டாஸ்க்காக இருக்கிறது. மண்டபத்தில் தொடங்கி கல்யாண சாப்பாடு என்று பல வேலைகள் போய்க்கொண்டே இருக்கிறது. அது மட்டுமில்லாமல் எங்களுடைய திருமணம் இந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் செய்து கொள்ள முடிவு பண்ணி இருக்கிறோம். இரண்டு குடும்பத்தின் ஆசீர்வாதமும் எங்களுக்கு கிடைக்கனும். அதனால் தான் எங்களுடைய திருமணத்தை நாங்கள் இந்த மாதிரி பண்ண முடிவு செய்து இருக்கிறோம். அதோடு மே 13ம் தேதி எங்களுடைய திருமணம் நடைபெறுகிறது. எல்லோருமே வந்திடுங்கள் என்று புன்னகையுடன் கூறியிருந்தார்.

Advertisement