பல வருடமாக ஒடிய பாக்கியலட்சுமி சீரியல் என்டுக்கு வந்துடுச்சா? காரணம் இது தான்- அதிருப்தியில் ரசிகர்கள்

0
160
- Advertisement -

திடீரென பாக்கியலட்சுமி சீரியல் முடிவடைய இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடர், குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. தற்போது சீரியலில் தன்னுடைய அப்பாவின் இறுதி சடங்கை செய்ய விடாமல் அவமானப்படுத்தியதால் பாக்யாவை அழித்துக் கட்ட கோபி முடிவெடுக்கிறார். இதனால் பாக்கியா ரெஸ்டாரண்டில் தன்னிடம் வேலை செய்த ஒரு நபரை வேலைக்கு சேர்த்து விடுகிறார் கோபி. அந்த நபருமே பாக்கியா எடுத்த புதிய ஆர்டரில் சுதப்பி வைத்தார். இதனால் பாக்யாவுக்கு பயங்கர பிரச்சனை வந்தது.

சீரியல் கதை:

மக்கள் எல்லோருமே பாக்கியா ரெஸ்டாரண்டில் போராட்டம் நடத்தி இருந்தார்கள். ஒரு கட்டத்தில் போலீஸ், உணவு துறை அதிகாரிகள் எல்லாம் வந்து சோதனை நடத்தி ரெஸ்டாரன்டுக்கு சீல் வைத்தது. இலட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு பாக்கியா என்ன செய்வது என்று புரியாமல் தவித்து நின்றார். இதெல்லாம் பார்த்து கோபி ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் எப்படியோ அந்த பிரச்சனையில் இருந்து வெளிவந்து மீண்டும் புதிய ஆர்டரை பாக்யா செய்கிறார். இதை கெடுக்கவும் கோபி திட்டம் போடுகிறார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் செழியனுக்கு வேலை போனதால், வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி கோபி தன்வசம் கொண்டு வர வாக்குறுதி கொடுக்கிறார். அதே போல் இனியாவை டான்ஸ் கிளாஸில் கோபி சேர்த்து விடுகிறார். இதனால் இனியாவுமே தன்னுடைய அப்பா தான் சூப்பர் என்று நம்புகிறார். இப்படி செழியன், இனியா இருவரையும் தன் பக்கம் இழுத்து கொண்டார். எப்படியாவது எழிலையும் தன் பக்கம் கொண்டு வர தயாரிப்பாளரை சந்தித்து படம் எடுக்க சொல்லி கோபி ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால், இந்த விஷயம் எழிலுக்கு தெரியாது.

முடிவுக்கு வந்த காரணம்:

இனி வரும் நாட்களில் பாக்கியா தன்னுடைய கேரியர், குடும்பத்தை பார்த்துக்கொள்வாரா? கோபியின் எண்ணம் ஈடேறுமா? போன்ற கட்டத்தில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் முடியருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த சில மாதங்களாகவே சீரியலினுடைய டிஆர்பி கீழே இறங்கி இருக்கிறது. குறிப்பாக, ராமமூர்த்தியின் கதாபாத்திரம் இறந்த பிறகு தான் டிஆர்பியும் சரிய தொடங்கியது. அதுமட்டுமில்லாமல் பேட்டியில் கூட ராமமூர்த்தி, சீரியல் முடிக்க இருப்பதால் தான் என்னுடைய கதாபாத்திரத்தை நீக்கிவிட்டார் என்றெல்லாம் கூறியிருந்தார். அதற்கேற்ப சீரியலிலும் கோபி, பாக்கியாவை பழிவாங்க ஒவ்வொரு திட்டங்களும் செய்கிறார். இதனாலே பாக்கியலட்சுமி சீரியல் முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து சேனல் தரப்பில் இருந்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.

Advertisement