விஜய் டிவியா ? ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸா? எது உங்கள் பேவரைட். ரசிகரின் கேள்விக்கு பாவனா அளித்த பதில்.

0
557
bhavana

மீடியா துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து மீடியா துறையில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் பாவனா பாலகிருஷ்ணனுக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

This image has an empty alt attribute; its file name is 1-128-580x1024.jpg

‘விஜய் டிவி’-யில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் பாவனா பாலகிருஷ்ணன். சமீபத்தில் கூட விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் ஆடியோ லான்சை கூட மிர்ச்சி விஜய்யுடன் இணைந்து தொகுத்து வழங்கி இருந்தார் பாவனா. இடையில் இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் வர்ணனையாளராகவும் பங்கேற்று வந்தார்.

- Advertisement -

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் ” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த பாவனா ‘விஜய் டிவி தான் எனக்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. விஜய் டிவி தான் மக்கள் கிட்ட என்னை கொண்டு சேர்த்தார்கள். ஆனால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் எனக்கு ஒரு குடும்பத்தை கொடுத்தது. அதனால் எனக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தான் என்று கூறியுள்ளார்.

தொகுப்பாளினி பாவனா, ஆரம்பத்தில் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியில் பணியாற்றி வந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது விஜய் டிவி தான். அதே போல இவர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் விஜய் தொலைக்காட்சியில் வாங்கிய சம்பளத்தை விட பன்மடங்கு அதிகம் என்றும் கூறுகின்றனர். அதனால் தான் என்னவோ இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலை கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement