சிவகார்த்திகேயன் மகளுடன் விஜய் பாடலுக்கு நடனமாடிய டிடி. மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கார் பாருங்க.

0
180377
dd-with-sivakarthikeyan-daughter

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர்களின் குழந்தைகைகள் சினிமாவில் கால் பதித்து வருகின்றனர். விஜய் மற்றும் ஜெயம் ரவி போன்றவர்களின் குழந்தைகள் சினிமாவில் முகம் காண்பித்துவிட்ட நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவும் ‘கனா’ படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகினார். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துவிட்டார் ஆராதனா.

View this post on Instagram

Vijay Tv #DD Dance With #Sivakarthiken's Daughter

A post shared by Behind Talkies (@behindtalkies) on

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றியவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். ஆனால், சிவகார்த்திகேயனுக்கு முன்பே விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் டிடி சினிமாவில் நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் டிடி தான் விஜய் டிவியின் செல்ல தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். விஜய் டிவியில் இவர் தான் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அந்த வகையில் டிடி, விஜய் தொலைக்காட்சியில் ‘அன்புடன்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார் அந்த நிகழ்ச்சியில் முதல் விருந்தினராக கலந்துகொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன். அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டபோது டிடியுடன் செல்பி எடுத்துக்கொள்ள விரும்பியதாகவும், பெரும்பாலும் யாருடனும் செல்பி எடுக்க மாட்டேன், ஆனால், செல்பி எடுக்க வேண்டும் என்பது போல தோன்றுகிறது என்று சிவகார்த்திகேயன் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இருப்பினும் தான் வேலை செய்த விஜய் டிவியை என்றும் மறப்பதே இல்லை. மேலும், விஜய் டிவியில் பணிபுரிந்து வரும் பல்வேறு நபர்களிடம் தற்போதும் நட்பு பாராட்டி வருகிறார் சிவகார்த்திகேயன். அதிலும் குறிப்பாக டிடியுடன் குடும்ப ரீதியாகவும் நல்ல நட்பில் இருந்து வருகிறார். சமீபத்தில் டிடி சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா உடன் இணைந்து விஜய் பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

Advertisement