வாக்களிக்க 8 மணி முதல் காத்திருந்த டிடி.! காத்திருந்த அதிர்ச்சி.!

0
360
DD

பாராளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியது. 12 மாநிலங்களில் உள்ள 96 மக்களவை தொகுதிகளுக்கு தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 38 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் மற்றும் திரையுலக பிரபலங்களான ரஜினி, கமல், அஜித், விஜய் , சூர்யா பல்வேறு நடிகர்களும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்க : உள்ளாடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்த தில்லாலங்கடி நடிகை.! 

- Advertisement -

அதே போல நடிகர்களான ரமேஷ் கண்ணா, சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் ஆகியோரின் பெயர்கள் வாக்கு பட்டியலில் இல்லாததால் அவர்களால் வாக்களிக்க முடியாமல் போனது. பின்னர் எப்படியோ சிவகார்த்திகேயன் மட்டும் வாக்களித்திருந்தார்.

இந்த நிலையில் சிவ கார்த்திகேயனை போலவே பிரபல தொகுப்பாளினியாக டிடியின் பெயரும் வாக்கு பட்டியலில் இல்லாமல் போயுள்ளது. வாக்களிக்க 8 மணி முதல் காத்திருந்த டிடி பெயர் இல்லை என்று தெரிந்ததும் சம்மந்தபட்ட அதிகாரிகளை அணுகி பின்னர் வாக்களித்துள்ளார்.