தீபாவளி ரிலீசில் எனக்கு பிடித்த படம் இது தான். நம்ம டிடி பேவரைட் படம் இதானம்.

0
15150
dd
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான தொகுப்பாளர் யார் என்றால் டிடி என்று சற்றும் யோசிக்காமல் சொல்லி விடுவார்கள். அந்த அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிடி என்றால் அனைவருக்கும் தெரியும். டிடியின் எதார்த்தமான பேச்சால் இவர் பேட்டி எடுக்கும் பிரபலங்கள் கூட இவரது பேச்சுக்கு கவர்ந்து விடுகிறார் கள் இதனால் திரைத்துறையில் இருக்கும் பல்வேறு நடிகர் நடிகைகளுக்கும் டிடி ஒரு பரிட்சயமான நபராகவே இருந்து வருகிறார்.

-விளம்பரம்-
20  years of divyadharshini

இதுமட்டுமல்லாது தொகுப்பாளினி பணியை தவிர டிடி சினிமாவிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார் டிடி. இருப்பினும் டிடிகும் பேரும் புகழும் ஏற்படுத்தி தந்தது காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி தான். இதில் சினிமா துறையில் இருந்து பல்வேறு பிரபலங்களை வரவழைத்து அவர்களிடம் ஜாலியான கேள்விகளை கேட்டு இந்த நிகழ்ச்சியினை மிகவும் சிறப்பாக கொண்டு சென்றார் டிடி. டிடி எனப்படும் திவ்யதர்ஷினி தொலைக்காட்சி துறைக்கு வந்து இதுவரை 20 ஆண்டுகள் ஆகிவிட்டது சமீபத்தில் இவருக்கு விடை தொலைக்காட்சியில் 20 years of dd என்ற விருதினை கூட வழங்கியிருந்தார்கள். அந்த அளவிற்கு விஜய் தொலைக்காட்சிக்கு மிகவும் ஒரு முக்கியமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

இதையும் பாருங்க : மதுமிதாவை தொடர்ந்து மற்றொரு போட்டியாளரின் வீட்டிற்கே சென்ற சேரன். வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

டிடி ஒரு தீவிர ரஜினியின் ரசிகர் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான். அதே போல டிடிக்கு தளபதி என்றாலும் மிகவும் பிடிக்கும். மேலும், டிடி பல முறை விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டிடி, தீபாவளிக்கு ரிலீசாண படங்களில் தன்னுடைய பேவரைட் படம் குறித்து கூறியுள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர், சில ஆண்டுகளாக தீபாவளி படங்கள்னாலே அது தளபதி படம் தான். அப்படி தீபாவளிக்கு நான் மிகவும் ரசித்துப் பார்த்த திரைப்படம்னா அது துப்பாக்கி தான். தளபதியோட மத்த படங்களும் பார்ப்பேன். ஆனால், துப்பாக்கி படம் தான் தீபாவளிக்கு நான் பார்த்த படங்களிலேயே பார்த்தது மிகவும் ஸ்பெஷல் என்று கூறியுள்ளார் டிடி.

dd

இது ஒருபுறம்இருக்க டிடிக்கு சமீபத்தில் “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் தந்து உள்ளார்கள். இதனால் திவ்யதர்ஷினி மிகுந்த சந்தோஷத்தில் பயங்கரமாக துள்ளிக் குதித்து கொண்டாடி வருகிறார். சென்னையில் நடைபெறும் பேஷன் ஷோக்களில் மிகவும் பிரபலமானது என்று சொன்னால் D AWARD மற்றும் DAZZLE STYLE ICON AWARD தான். மேலும், இந்த இரண்டும் இணைந்து பிரம்மாண்டமாக நிகழ்ச்சி ஒன்று நடத்தியது. இந்த ஃபேஷன் ஷோ பிரபலங்களை கௌரவப்படுத்தும் வகையில் ஏற்படுத்தியது. இதில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

இந்த விருதை பெற்றது குறித்து பேசிய டிடி, நம்மை யாராவது ஒருவர் டார்லிங் என்று செல்லமாக அழைத்தால் நம் மனதிற்குள் பட்டாம்பூச்சி பறக்கின்ற மாதிரி இனிமையாக இருக்கும். அனைவருக்குமே ரொம்ப பிடித்த வார்த்தை டார்லிங். அதே போல் எனக்கு டார்லிங் ஆப் தி டெலிவிஷன் என்ற அவார்ட் கிடைத்தது எனக்கு ரொம்ப பெருமையாகவும் இருக்கிறது. ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான ஸ்டைல் இருக்கும். அதிலும் வயது அதிகமாகும்போது நமக்கு பொறுப்புகள் அதிகமாகின்றன. மேலும், நான் டிவியில் தொகுத்து வழங்கிய ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் ஒவ்வொரு விதமான ஆடைகளை அணிந்து வந்துள்ளேன். அதோடு என்னுடைய பேச்சுத் திறமைக்கு மட்டுமல்லாமல் நான் அணியும் ஆடைகளுக்கும் பாராட்டுக்களை தெரிவிப்பார்கள் ரசிகர்கள். எனது ஆடைகளுக்கு டிசைன் செய்து கொடுக்கும் டிசைனர்களுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதில் நான் மிக உறுதியாக இருப்பேன் என்று பேசி இருந்தார் டிடி.

Advertisement