விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். இவர் 20 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள்.
திவ்யதர்ஷினி அவர்கள் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். ஜூலி கணபதி, விசில், பவர் பாண்டி போன்றபடங்களில் நடித்துள்ள டிடி இறுதியாக சர்வம் தாளமயம் படத்தில் நடித்திருந்தார். மேலும், விக்ரம் நடிப்பில் பல ஆண்டுகளாக உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து உள்ளார். ஆனால், இந்த படம் நீண்ட காலமாக கிடப்பில் இருந்து வரும் நிலையில் மாதவன் நடித்து வரும் புதிய படத்தில் டிடியும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் பாருங்க : என் தற்கொலைக்கு காரணம் அவன் தான் – வைரலாகும் நடிகையின் தற்கொலை வீடியோ.
தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் வித்யாசமான கதை காலங்களை தேர்ந்தெடுத்து அதில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான நடிகர். தமிழ் சினிமாவில் நுழைந்த போது சாக்லட் பாய் என்ற முத்திரையுடன் வந்த மாதவன் தற்போது ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார். மாதவன் தற்போது இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழக்கையை மையமாக வைத்து ஒரு புதிய படத்தின் நடித்து வருகிறார்.
‘ராக்கெட்- தி நம்பி எஃபெக்ட்’. ISRO விஞ்ஞானி நம்பி நாராயணனின் உண்மைக் கதையான இதில் நம்பியின் 27 வயது முதல் 75 வயது வரையிலான தோற்றங்களில் வருகிறார் மாதவன்.நம்பி நாராயனனின் திருநெல்வேலியில் பிறந்து கேரளாவில் வளர்ந்தவர்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த நம்பி நாராயனனின் வாழ்க்கையில் நடந்த துரோகங்களையும, மறைக்கபட்ட உண்மைகளையும் இந்த படத்தின் மூலம் உலகிற்கு வெளிக்கொண்டு வர விருக்கின்றனர்.